கர்நாடகா :டெல்லி-என்சிஆர் தெருக்களில் நாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் கண்ட உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து விசாரணை நடத்தி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில், தெருநாய்கள் பிரச்சினை குறித்த சபை விவாதத்தின் போது கர்நாடக ஜேடி (எஸ்) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எல் போஜேகவுடா தனது கருத்துக்களுக்குப் பிறகு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அதாவது, கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது 2,500 தெருநாய்களைக் கொன்று, அவைகளை மரங்களுக்கு அடியில் புதைத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தியதாக இன்று சட்டமன்றத்தில் JDS கட்சி எம்.எல்.சி போஜேகவுடா பரபரப்பாக பேசியுள்ளார்.
தெருநாய்களை அகற்றுவதை யாராவது எதிர்த்தால், அவர்களின் வீடுகளுக்குள் 10 தெருநாய்களை விட வேண்டும் என்றும் என ஆவேசமாக கூறியுள்ளார்.
