கர்நாடகம் : முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2.45 மணியளவில் தன்னுடைய வீட்டில் காலமானார். அவர் இறந்ததை தொடர்ந்து அவருடைய இறப்புக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறுதிச்சடங்கு நாளை (11.12.2024) அரசு மரியாதையுடன், மத்தூர் தாலுகா, ஹூத்துரா, மாண்டியா மாவட்டம், சோமனஹள்ளி ஸ்வகிராமில் நடைபெறவுள்ளது. அங்கு அவருடைய உடல் தகனுமும் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவருடைய மறைவை துக்க நிகழ்வாக அனுசரிக்கப்படவேண்டும் […]
கர்நாடகம்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் காலமானார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது இல்லத்தில் அவர் மரணமடைந்தார். அவரது உடல் இன்று மத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா 1932ல் பிறந்தார், இவரது முழுப்பெயர் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா. 1962ஆம் ஆண்டு கர்நாடக மேல்சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அரசியலுக்குள் நுழைந்தார் எஸ்.எம். கிருஷ்ணா. பின்னர், 1967ஆம் ஆண்டு பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார். […]
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல்களின் முடிவுகளில் சந்தூர் மற்றும் சிகான் தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனையடுத்து , தற்போது கர்நாடகம் மாநிலத்தில் சந்தூர், ஷிகான்,, சன்னப்பட்னா ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. ஷிகான் : இடைத்தேர்தலில் காங்கிரஸ் […]
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குபதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ளு 38 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 43 தொகுதிகளில் மொத்தம் 73 பெண் வேட்பாளர்கள் உட்பட 683 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா (JMM) 30 தொகுதிகளிலும், பாஜக […]
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, வத்சன் சக்ரவர்த்தி, ஆனந்தராஜ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் ஒரு ஃபேண்டஸி பீரியட் ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு […]
பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின் ஈழ கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு சுமார் பல கோடிகள் இழப்பீடு ஏற்பட்டதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் […]
கர்நாடகா : கேரளாவில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் (ஜூலை 30) துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹொசன் மாவட்டத்தில் மங்களூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஷீரடி கட் சக்லேஷ்பூர் டோடோ என்ற பகுதியில் நிகழ்ந்த […]
மேட்டூர் : கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதால் காவேரி மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றைய நாள் மேட்டூர் அணியில் 100 அடி எட்டிய விலையில், இன்று காலை நிலவரப்படி 107 அடியை தொட்டது. இந்நிலையில், இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த […]
மேட்டூர் : கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியது, இருந்தாலும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தன. இதனை தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு இடங்களில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கிருஷ்ணராஜ் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று அந்த அணையிலிருந்து வினாடிக்கு 1.31 லட்ச கன அடியும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீரும் என […]
மேட்டூர் அணை : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பியது. அதிலும், காவேரி ஆற்றின் முக்கிய அணைகளாக இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணை ஆகிய எல்லா அணைகளும் நிரம்பியது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது, இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் […]
நீட் தேர்வு : தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு. நடப்பாண்டில் நீட் நுழைவுத்தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெற்ற விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வின் மீதான எதிர்ப்பலைகளை உருவாகியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து […]
கர்நாடகா: காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கடந்த வாரம் வரையில் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வந்தது. காவிரி ஒழுங்காற்று வாரியம் தினம் ஒரு டிஎம்சி வீதம் இம்மாதம் முழுக்க வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து ஒருநாளைக்கு வெறும் 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படும் என அம்மாநில அரசு கூறியிருந்தது. இப்படியான சூழலில் தான் கடந்த வாரம் முதல் காவிரி நீர்ப்பிடிப்பு […]
டெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் வரும் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புது வை மாநில அதி காரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது. காவிரியில் இருந்து […]
பெங்களூரு: கர்நாடகாவில் அண்மையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், தனியார் நிறுவனங்களில் சி,டி கிரேடு பணிகளில் 100 சதவீதம் கன்னடர்களை பணியமர்த்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தில், நிர்வாக பணிகளில் 50 சதவீதம் கன்னடர்கள் பணியமர்த்தப்பட வேண்டும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 75 சதவீதம் பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளுக்கு தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, ஐடி நிறுவனங்களின் சங்கமான NASSCOM கடும் […]
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள C,D கிரேடு பணிகளில் உள்ள வேலைவாய்ப்புகள் கர்நாடகாவை சேர்த்தவர்களுக்கே கிடைக்க வேண்டும் எனும் வகையில் புதிய மசோதாவை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும், வேலையின்மையை குறைக்கும் நோக்கிலும் புதிய மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் […]
கர்நாடகா : உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுக்காவில் உள்ள ஷிரூர் என்ற கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66 இல் ஒரு மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக நான்கு வழிச்சாலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால், தேசிய நெடுஞ்சாலை 776-E மற்றும் தேசிய நெடுஞ்சாலை 66 உட்பட பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே போல், ஹொன்னாவர் […]
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. முன்னதாக காவிரி ஒழுங்காற்று வாரியம் பரிந்துரை (உத்தரவு) செய்து இருந்த இம்மாதம் (ஜூலை) ஒரு நாளைக்கு 1 டிஎம்சி அளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்பதை கூட கர்நாடக அரசு ஏற்க மறுத்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 16) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் […]
வேலூர்: காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 99வது காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டத்தில், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தினசரி 1 டிஎம்சி தண்ணீர் வீதம் அடுத்த 30 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை (உத்தரவை) முன்வைத்தது. ஆனால் அதனை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. நேற்று முன்தினம் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக […]
பெங்களூரு: காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். காவிரி ஒழுங்காற்று வாரியத்தின் 99வது ஆலோசனை கூட்டம் அக்குழுத் தலைவர் நவீன் குப்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் கர்நாடகா அரசு காவிரியில் இருந்து 175 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், 79 டிஎம்சி தண்ணீர் தான் இதுவரை கர்நாடக […]
காவிரி நீர் சர்ச்சை : தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்பதில் கர்நாடகா இருந்த நிலையில், தற்போது தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து கொண்டே தான் வருகிறது. இதற்கு ஒரு தீர்வை கொண்டுவரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது […]