சசிகலா வருகையால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது – ஜி.கே.வாசன் கருத்து

Tamil State Congress leader GK Vasan has said that Sasikala's visit will not affect the AIADMK.

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜிகே வாசன், தற்போது உள்ள நிலை அதிமுகவின் வெற்றியை உறுதி செய்துகொள்ளும் வகையில், தமிழகத்தில் பிரகாசமாக இருக்கிறது. பொதுமக்கள் அதிமுகவின் வளர்ச்சி திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே, இது தொடரும் ஆட்சி மீண்டும் வெற்றி பெற்று வரும். சசிகலாவின் வருகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.