Tag: TNCONGRESS

காங்கிரசிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்!

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம். காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மோதல் நடந்த விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் ரூபி மனோகரன். மோதல் சம்பவம் குறித்து விளக்கமளிக்க ரூபி மனோகரன் […]

#Congress 3 Min Read
Default Image

பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் கே.எஸ்.அழகிரி!

இந்தியை திணிக்கும் முயற்சியாக அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை உள்ளது என கேஎஸ் அழகிரி கருத்து. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பதிவிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியா பலமொழிகள் பேசுகிற பன்முகத்தன்மை […]

#AmitShah 3 Min Read
Default Image

ராஜீவ் காந்திக்கும், அவருடன் மரணித்த 17 பேருக்கும் தயார் இருக்கின்றனர் – கே.எஸ்.அழகிரி

ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பது நியதியா? என கே.எஸ்.அழகிரி கேள்வி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். நம்முடைய மன உணர்வை […]

#Congress 6 Min Read
Default Image

சற்று நேரத்தில்…தமிழகம் முழுவதும் வாயை வெள்ளை துணியால் கட்டி அறப்போராட்டம் – காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை எனவும்,அதே நேரத்தில்,குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்றும்,அவர்கள் நிரபராதிகள் அல்ல என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும்,இது தொடர்பாக […]

#KSAlagiri 5 Min Read
Default Image

காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் – கே.எஸ்.அழகிரி

ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை. சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழ்நாட்டை ஆளும். காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஒருநாள் தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக வரும். மேயர் பதவிகளை திமுகவிடம் கேட்டிருக்கிறோம். மத்தியில் 60 ஆண்டுகள் ஆண்டிருக்கிறோம், 7 ஆண்டுகள் ஆளாமல் இருப்பதும் அனுபவம்தான். பாஜக 3வது கட்சியாக அல்ல, 30வது கட்சியாக […]

#Congress 5 Min Read
Default Image

தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகள் சிறப்பாக அமைந்திட, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவின் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் […]

#KSAlagiri 4 Min Read
Default Image

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை – கே.எஸ்.அழகிரி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை. தங்கள் மீது சுமத்தப்படும் ஊழல் புகார் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#KSAlagiri 2 Min Read
Default Image

பிப்.25 முதல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் – காங்கிரஸ்

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சினர் பெறலாம். பொதுத்தொகுதிக்கு ரூ.5,000, தனித்தொகுதி, மகளிர் தொகுதிக்கு ரூ.2,500 நன்கொடையாக தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்ப […]

#KSAlagiri 3 Min Read
Default Image

தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்?- கேஎஸ் அழகிரி

புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதனிடையே, […]

#KSAlagiri 3 Min Read
Default Image

சசிகலா வருகையால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது – ஜி.கே.வாசன் கருத்து

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜிகே வாசன், தற்போது உள்ள நிலை அதிமுகவின் வெற்றியை உறுதி செய்துகொள்ளும் வகையில், தமிழகத்தில் பிரகாசமாக இருக்கிறது. பொதுமக்கள் அதிமுகவின் வளர்ச்சி திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே, இது தொடரும் ஆட்சி மீண்டும் வெற்றி பெற்று வரும். சசிகலாவின் […]

#ADMK 2 Min Read
Default Image

இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை – கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு எந்த பயனுமில்லை என்றுகார்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவால் எந்த பலனும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் நியமிக்கப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரமில்லாததால் யாருக்கும் பொறுப்பு இருக்காது. 32 துணை தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 […]

KartiPChidambaram 3 Min Read
Default Image

கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் கைது

 கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.  அண்மையில் சட்டமாக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனி – போடியில் விவசாயிகள் மாநாட்டை காங்கிரஸ் இளைஞரணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் […]

#KSAlagiri 2 Min Read
Default Image

காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.?- மாவட்ட தலைவர் விளக்கம்.!

காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதிவு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் விளக்கம். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அக்கட்சியின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு எதிர் வரும் தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை […]

#Congress 3 Min Read
Default Image