“பிஜேபி-யின் திருட்டுத்தனம் அம்பலம்” வாக்கு பெட்டியை திருட முயன்ற பிஜேபி_ யின் ஏபிவிபி ..!!

Default Image

தில்லி,

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. இதில் ஸ்கூல் ஆப் பிசிக்கல் சயின்ஸ், ஸ்கூல் ஆப் லைப் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கான தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றது.இதே போல் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம் பரிவில் சுயேச்சை வேட்பாளர்கள் ஏபிவிபி வேட்பாளர்களை தோற்கடித்தனர்.

Image result for bjp abvp

இந்நிலையில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி மிகக்குறைந்த அளவே வாக்குகளை பெற்று வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஏபிவிபி மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் அதிரடியாக வாக்குப்பெட்டிகளை தூக்கி செல்ல முயன்றனர். இதையடுத்து ஏற்பட்ட மோதலின் காரணமாக வாக்கு எண்ணிக்கையை ஜேஎன்யூ பல்கலைக்கழகம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.

Image result for ஜேஎன்யூ பல்கலைக்கழகம்

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 5185 வாக்குள் பதிவாகின. அதாவது 67.83 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதில் ஸ்கூல் ஆப் லாங்குவேஸ் 69.70 சதவிகிதமும், ஸ்கூல் ஆப் சோசியல் சயின்ஸ் 61.26 சதவிகிதமும் மற்றும் ஸ்கூல் ஆப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸ் 65.55 சதவிகித வாக்குகளும் பதிவாகின.
இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது தொடர்ந்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றிகளை குவிக்கும் வகையில் அதிக வாக்குகளை பெற்று வந்தனர். இந்நிலையில் ஏபிவிபி அமைப்பினர் திடீரென வாக்கெடுப்பு மையத்துக்குள் நுழைந்து சீலிடப்பட்ட வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல முயன்றனர். அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டது”

Image result for sfi flag

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜேஎன்யூ தேர்தல் குழு, வாக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தில்லி பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் தனி நபரிடம் இருந்து வாக்கு  இயந்திரங்களை வாங்கி தில்லுமுல்லு செய்து பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி பெற்றது. இதற்கு அந்த பல்கலைகழகத்தின் நிர்வாகமும் நிர்பந்திருக்கப்ட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையிலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலிலும் எப்படியாவது குறுக்கு வழியில் ஏபிவிபி வெற்றி பெற வேண்டும் என முயன்று வருகின்றனர். இதற்கு பாஜக மத்திய ஆட்சியதிகாரம் முழுவதையும் பயனப்டுத்தி வருகிறது.இதனால் பிஜேபியின் திருட்டுத்தனம் அம்பலமாகியுள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025