டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் என வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.22% வாக்கு சதவீதமும், ஜார்கண்ட் மாநில 2ஆம் கட்ட தேர்தலில் 67.59% வாக்கு சதவீதமும் பதிவாகியுள்ளன. […]
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங் செஞ்சின் என்பவரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீது ரூ.100 கோடி வரையில் மோசடி வழக்கு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் அச்சுதன் என்பவர் சைபர் கிரைம் போலீசாரில் அளித்த புகாரில், தன்னிடம் ஆன்லைன் வாயிலாக பங்கு சந்தை முதலீடு குறித்து பயிற்றுவிப்பதாக கூறி வாட்ஸ்அப் செயலி வழியாக தொடர்பு […]
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு வந்தது. மொழி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் இருக்கும். அதில் தேவை இருப்பின் இந்தி மொழி தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், இன்று காலை முதல் LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் […]
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது பாட்டி இந்திரா காந்தி பற்றி காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்பு மற்றும் தைரியம் என இரண்டுக்கும் உதாரணமாக எனது பாட்டி (இந்திரா காந்தி) திகழ்கிறார். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் . ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், பதவி விலகிய 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியின் போக்குவரத்து […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவி என அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொண்டார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார். அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் […]
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் நீண்ட தூர பயணங்களை ஒரு மணிநேரத்திற்குள்ளாக மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார். இதன் மூலம் டெல்லியில் இருந்து சான் பிராசிஸ்க்கோ செல்லும் தூரம் வெறும் 30 நிமிடங்களாக குறையும் என கூறப்படுகிறது. எக்ஸ் சமூக வளைத்ததில் ஒருவர், எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியின் கீழ், ஸ்டார்ஷிப் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா நாட்டிற்கு புறப்பட்டார். அதற்கான தனி விமானத்தில் பிரதமர் மோடி புறப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அடுத்த சில நாட்கள், நான் நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருப்பேன். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்த […]
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் ஓர் புயலை கிளப்பினார். இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா மாநில அரசு மீது […]
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அந்த அருகாட்சியகம் குறித்து சந்திரசூட் கூறுகையில், ” இந்த அருங்காட்சியகம் நமது தேசத்தில் நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த அருங்காட்சியகம் தற்போது தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” எனக்கூறி, ” நீதியை வழங்குவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். அந்த நீதிமன்ற அருங்காட்சியகத்தில் AI தொழில்நுட்ப உதவியுடன் ஒரு டிஜிட்டல் வழக்கறிஞர் திரை ஒன்று அறிமுகம் […]
புதுடெல்லி : தீபாவளி தினத்தன்று டெல்லியின் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான குழப்பான சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியும் வருகிறது. வீடியோவில் இருவர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவர் அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மற்றொருவருடன் பேசிக்கொண்டு வருகிறார்கள். பிறகு திடீரென எதோ பேசிக்கொண்டு ஒருவர் வீட்டிற்குள் செல்ல பைக்கில் வந்தவருடன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென வேகமாக […]
டெல்லி : இணையத்தில் google.com, yahoo.com என அந்தந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் அடங்கிய .com, .in என இணையகள முகவரியை தங்களுக்கானதாக வாங்கி வைத்துக்கொள்ளும். அந்த நிறுவனத்தை பற்றி இணையத்தின் வாயிலாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் அந்த இணையதள முகவரியை தொடர்புகொள்வர். சில சமயம் பிரபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் அடங்கிய இணையதள முகவரியை வாங்க தவறினாலோ, அல்லது அதே போல வேறு பெயரை கொண்டோ இணையதள முகவரிகள் உருவாக்கப்படும். அப்படி ஒரு […]
கோவை : கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் எதிர்நோக்கியது போலவே, கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால், பயங்கரவாதிகள் சதி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த வெடி விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து டெல்லி சிறப்புபிரிவு போலீசார், தேசிய புலனாய்வு குழுவினர், தேசிய பாதுகாப்பு படையினர் என பல்வேறு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து […]
டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி […]
டெல்லி : ரோகிணி நகர் பிரகாஷ் விஹாரில் இயங்கி வரும் CRPF பள்ளி முன்பு இன்று காலை 9.30 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடித்தது வெடிகுண்டா? அல்லது மர்மப்பொருளா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய புலனாய்வுத் துறையினர் டெல்லி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் […]
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மீதமுள்ள விவசாய பொருட்களை எரிப்பதால் வரும் புகை டெல்லி காற்றை அதிகளவில் பாதிக்கிறது. மேலும், டெல்லியில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக அமைகிறது. அதனை கட்டுப்படுத்தவும், வாகன கட்டுப்பாட்டை அரசு அவ்வப்போது […]
டெல்லி : நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதைகளின் சிலையானது கண்கள் கட்டப்பட்டு, இடது கையில் தராசு, வலது கையில் வாள் என அமைந்திருக்கும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எந்த ஒரு பாகுபாடுமின்றி நீதி வழங்கவேண்டும் எனவும் சரியான எடையில் தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் அநீதியை அழிப்பதற்காகவே அந்த வாள்’ என்பதாகும். இந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல் தற்போது வரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் இரு மாநிலங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழல் நிலவி வருகிறது. அதே போல, ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019இல் […]
டெல்லி: ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 2 இளைஞர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். காயத்திற்கு கட்டுப்போட்ட பின், மருத்துவரை சந்திக்க வேண்டும் என கூறிய இளைஞர்கள் அவரது அறையில் சந்தித்து சுட்டுக்கொன்றனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், தலைநகர் டெல்லியிலேயே […]