முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் மனு தள்ளுபடி. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக்கூறி உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் மனுவை தள்ளுபடி செய்தார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் இல்லத்தை பாஜகவின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி. அமைப்பினர் முற்றுகையிட்டனர். தஞ்சை […]
ராம நவமி தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பின்னர்,பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,ராம நவமி தினத்தை முன்னிட்டு அசைவ உணவுகளை சாப்பிட கூடாது என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களிடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய இரு தரப்பிலும் […]
ஏபிவிபி தலைவர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்த விவகாரத்தில் ஏபிவிபி தலைவர் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பயன்படுத்திய முக கவசத்தை வீசியும், சிறுநீர் கழித்தும் பக்கத்து வீட்டு பெண்மணிக்கு இடையூறு செய்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி […]
கடந்த 2020 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும்,மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 19 ஆம் தேதி ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு: சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் […]
ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை எதிர்த்து, நேற்று அகமதாபாத்தில் ஏபிவிபி அலுவலகம் எதிரே போரட்டம் நடத்தினர். இந்த மோதலில் குஜராத் மாநில என்எஸ்யுஐ (NSUI) தலைவர் நிகில் சவானிக்கு தலையில் அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்று கிழமை ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களை கொண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் என […]
தூத்துக்குடி , டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும் வெற்றி பெற்ற நிர்வாகிகளை வாழ்த்தும் விதமாக இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது .டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த […]
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு மாணவர் அமைப்பு முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பலத்த போட்டி காணப்பட்டது. இந்த தேர்தலில், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், மற்றும் காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ எனப்படும் இந்திய […]
தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்று, அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. இதில் ஸ்கூல் ஆப் பிசிக்கல் சயின்ஸ், ஸ்கூல் ஆப் லைப் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கான தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றது.இதே போல் ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம் பரிவில் சுயேச்சை வேட்பாளர்கள் ஏபிவிபி வேட்பாளர்களை தோற்கடித்தனர். இந்நிலையில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி மிகக்குறைந்த அளவே வாக்குகளை பெற்று வந்த நிலையில் வாக்கு […]
டெல்லி , டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் முதன் முறையாக வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அதில் மோசடி செய்து பாஜக மாணவர் அணியான ஏபிவிபி வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்திய தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் வியாழனன்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஏபிவிபி தலைவர், மற்றும் துணைத்தலைவர், துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சந்தேகம் வந்துவிடக்கூடாது […]
குஜராத் மாநிலம் வாரணாசியில் உள்ள குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் சங்கமான ABVP பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே அதன் வசமிருந்த அனைத்து பொறுப்புகளையும் இழந்துவிட்டது. குஜராத் சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் வேளையில் இந்த தோல்விகள் பா.ஜ.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குஜராத் மாநில இளைஞர்கள் பா.ஜ.க.வின் மீது கொண்டுள்ள வெறுப்பின் அடையாளமாக இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.