பஞ்சாப் அணியை விட்டு டெல்லி அணிக்கு செல்கிறாரா அஸ்வின்?! பஞ்சாபின் புதிய கேப்டன் யார்?

ஐபிஎல் : கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணியை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிநடத்தி வருகிறார். பஞ்சாப் அணிக்காக 7.6 கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டார்.

ஐபிஎல்: கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணியை தமிழக கிரிக்கெட் வீரர்அஸ்வின்வழிநடத்தி வருகிறார். பஞ்சாப் அணிக்காக7.6 கோடிரூபாய் விலைக்கு வாங்கப்பட்டார். இவர் தலைமையில் பஞ்சாப் அணி ஐபிஎல்-இல் 28 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அதில் 12 போட்டியில் வெற்றியும், 16 போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது.

unknown node

ஐபிஎல் போட்டிகளில் தொடக்க ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாளும்,  இரண்டு வருடமாக தகுதி சுற்றிற்க்கு முன்னேறாமல் போனதால் பஞ்சாப் அணி நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதன்படி, முதலில் பயிற்சியாளர்களை அதிரடியாக நீக்கியது. அதனை அடுத்து 2020ஆம் ஆண்டு புதிய கேப்டனை கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கும் என அறிவிக்கபட்டிருந்தது.

தற்போது, அஸ்வினைடெல்லிஅணிக்கு மாற்ற அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.  அதற்கான பேச்சுவார்த்தையை டெல்லி அணியுடன், பஞ்சாப் அணிநிர்வாகம் நடத்தி வருகிறதாம்.  அதே நேரத்தில் பஞ்சாப் அணியின்புதிய கேப்டனாக கே.எல்.ராகுல்நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.