காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அஷ்வின், முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். […]
ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார். இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி […]
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் போது நடைபெற்ற சம்பவங்களை இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் அண்மையில் பகிர்ந்துள்ளார். 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடியது. நடைபெற்ற மூன்று டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது […]
ஐபிஎல் : கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் அணியை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிநடத்தி வருகிறார். பஞ்சாப் அணிக்காக 7.6 கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டார். இவர் தலைமையில் பஞ்சாப் அணி ஐபிஎல்-இல் 28 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அதில் 12 போட்டியில் வெற்றியும், 16 போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் தொடக்க ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாளும், இரண்டு வருடமாக தகுதி சுற்றிற்க்கு முன்னேறாமல் போனதால் பஞ்சாப் அணி நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை […]