மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கின்றது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருப்பதால், பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது.
குறிப்பாக, தமிழ் சினிமா பிரபலங்களான விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபலங்கள் எல்லாம் ‘நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கு பாதுகாப்பதுடன் இருங்கள் மக்களே’ என அறிவுறுத்தி இருந்தார்கள். இப்படியான வெள்ளத்தில் மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்றும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்ய கூறியும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் செய்து கொடுத்துக் கொண்டும் வருகிறார்கள்.
வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!
அந்த வகையில், தற்போது புயலால் திணறி வரும் செங்கல்பட்டு மாவட்ட சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உதவிப் பொருட்களை வாங்கியுள்ளார்.
unknown nodeஇது மட்டும் இல்லாமல், தளபதி விஜய் மக்கள் இயக்கம் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைமை மற்றும் வடசென்னை மாவட்ட மாணவரணி இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கினர்.
unknown nodeஇதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
