நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார். அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது […]
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் […]
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய […]
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், விஜய் மக்கள் […]
கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அப்போது அன்று இரவு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேற்று வருகை தந்தார். அஞ்சலி செலுத்தும்போது விஜயகாந்தின் உடலை பார்க்க முடியாமல் கண்கலங்கி அழுதார். […]
மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிசம்பர் 14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும். காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி […]
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த சென்னை புறநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் வேலையில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் நிலைமை சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் வரை இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் புறநகர் மக்கள் இன்னும் வீட்டை […]
மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கின்றது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருப்பதால், பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் சினிமா பிரபலங்களான விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா போன்ற […]
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் விஜய் சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்து சில அறிவுரைகளை கூறினார். பேனர் வைப்பது மட்டும் போதும், அதில் பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம் எனவும், ஏழை எளிய மக்கள் மற்றும் தேவையுள்ள பொதுமக்களுக்கு விஜய் மக்கள் […]
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்துள்ளார். கடைசியாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து இன்று அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசிய முக்கியமான விஷயங்களை பற்றி பேசி அறிவுரை கூறியுள்ளார். அதனை பற்றி […]
3 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார் சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். அதனை தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் […]
உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தன்னுடைய மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து […]
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சந்திரசேகர் மனு. விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் மன்றத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை, ரசிகர்களாக தொடர்வதாகவும் அந்த மனுவில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் தெரிவித்துள்ளார். […]
அரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் தளபதி விஜய்யை சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது. சமீப காலமாக அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்து வருகின்றன. இந்த நிலையில், அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், சமீப காலமாக, இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற […]
விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் […]
தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வெற்றிடத்தை நடிகர் விஜய் நிரப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டமானது அதன் மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜா தலைமையில் கூடியது.அக்கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.ராஜா, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விஜய் நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழ் திரையுலகில் […]