இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதி வருகிறது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
unknown nodeமுதலில் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், லிட்டன் தாஸ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடி இருவரும் ரன்கள் சேர்த்தனர்.அந்நிலையில் லிட்டன் தாஸ் 5-வது ஓவரில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பின்னர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்க தமீம் இக்பால் , ஷாகிப் அல் ஹசன் இருவரும் சேர்ந்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர். பின்னர் 17-வது ஓவரில் தமீம் இக்பால் 36 ரன்னில் வெளியேற நிதானமாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன் அரை சதத்தை நிறைவு செய்தார்.
unknown nodeமத்தியில் பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் களமிறங்க நிதானமாகவும் ,சிறப்பாகவும் விளையாடி ரன்களை சேர்த்தார்.பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன் 51, சௌம்யா சர்க்கார் 3 , மஹ்மதுல்லா 27 , முஷ்பிகுர் ரஹீம் 83 ரன்களுடன் வெளியேறினர்.
unknown nodeஇறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டையும் , குல்படின் 2 விக்கெட்டையும் பறித்தனர்.263 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.