டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில் இருந்த போது அப்போது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதிமுதல் தற்போது வரை தஞ்சம் அடைந்து உள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து, அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அந்நாட்டு நீதிமன்றம், அவர் மீதும், அவரது அமைச்சரவை, அப்போது […]
வங்கதேசம் : கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், ரசிகர்கள் மற்றும் அவரும் வங்கதேசம் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு சென்றால் நன்றாக இருக்கும். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அந்த போட்டியில் விளையாடி கொள்கிறேன் என ஷாகிப் அல் ஹசன் கோரிக்கையும் வைத்திருந்தார். ஆனால், வங்கதேசத்தில் இப்போது அரசியல் போராட்டங்கள் நடந்து வருவதால், தற்போது […]
செயின்ட் கிட்ஸ்: இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியும் இன்று இரவு நடைபெறுவுள்ளது. இரண்டு போட்டிகளிலும் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரேம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் VS வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், கொண்ட தொடரில் விளையாடி […]
சார்ஜா : வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில் கடுமையான காயத்திலிருந்து தப்பித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ஐயா ஜஸ்ட் மிஸ் என நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார்கள். போட்டியில், பங்களாதேஸ் அணியின் இன்னிங்கிஸின் போது ரகமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்) பந்தை தடுக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் ரஷித் கானும் அந்த பந்தை […]
பங்களாதேஷ் : கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்காளதேசத்தில் இப்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில், ஷேக் ஹசீனாவை நவம்பர் 18-ல் நேரில் ஆஜர்படுத்த வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைமறைவான முன்னாள் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் […]
திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய 6 இளைஞர்கள் வேலை தேடி இந்தியா வந்துள்ளனர். மேலும், இவர்கள் 6 பேரும் கவுகாத்தி வழியாக திருப்பூருக்கும் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 6 இளைஞர்களும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கூலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்த்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்,நேற்று அந்த இளைஞர்கள் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு […]
வங்கதேசம் : இந்தியாவின் சுதந்திரம் , பாகிஸ்தான் பிரிந்து சென்ற காலத்திற்கு பின்பிருந்து, 1971க்கு முன்பு வரையில் வங்கதேசம் என்ற நாடு இல்லை. வங்கதேச நாட்டின் பெயர் கிழக்கு பாகிஸ்தான். தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது வங்கதேசம். 1971 கலவரம் : அந்த சமயம், 1970ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) நடைபெற்ற தேர்தலில் ஷேக் முஜ்புர் ரஹ்மான் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து ‘வங்கதேசம்’ தனி நாடு கோரிக்கையை இந்தியாவின் ஆதரவோடு முன்னிறுத்தினார். இந்திய […]
வங்கதேசம் : இடஒதுக்கீடு , மாணவர்கள் போராட்டம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புகளை தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தற்காலிமாக தஞ்சம் அடைந்தது வரையில் அனைத்தும் தலைப்பு செய்திகளாக நமக்கு தெரிந்த கதையாகி உள்ளது. இந்தியாவில் தஞ்சம் : ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்குமா என்பது சந்தேகமே. ஷேக் ஹசீனா அடுத்ததாக இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில் , அந்நாட்டு சார்பாக வெளியான தகவலின் படி, […]
டெல்லி : வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் பின்னாளில் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கானோர்கள் உயிரிழக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. நாட்டின் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துள்ளார். இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா, பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம் குறித்தும், வங்கதேச […]
வங்கதேசம் : வங்கதேசத்தில் விடுதலை போரட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பொதுச்சொத்துக்கள் பெருமளவு சேதமடைந்தன. பின்னர், இந்த இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அப்போது மாணவர்கள் போராட்டம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இந்த கலவரத்தில் இதுவரை சுமார் […]
வங்கதேசம் : பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு ஹெலிகாப்டரில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் நடந்த புதிய போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் […]
டெல்லி: வங்கதேச கலவரத்தால் அங்கிருந்து 6700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. கல்லூரி மானவர்களின் போராட்டத்தால் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்காமல் மூடப்பட்டுவிட்டன. இதனால், வங்கதேசத்தில் பயின்று வரும் […]
சென்னை: வங்கதேச போராட்டத்தால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 42 தமிழக மாணவர்கள் அரசு உதவியுடன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். வங்கதேசத்தில் அந்நாட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டதிருத்தத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக அந்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், வங்கதேசத்தில் படித்து வந்த இந்திய மாணவர்கள் […]
வங்கதேசம் : 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் , பொதுச்சொத்துக்கள் சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அரங்கேறின . பல மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக […]
வங்கதேச மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இடஓதுக்கீடு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் உயிரிழப்புகளும் நேரந்தன. இதனால், கல்லூரிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. வங்கதேச மருத்துவ கல்லூரிகளில் இந்திய மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்களையும் நாடு திரும்ப அந்நாட்டு அரசு கூறியது. இதனை அடுத்து, […]
பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது, நேற்று மட்டும் 52 […]
வங்கதேசம்: 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இம்மாதம் தொடக்க முதலே மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் அதிகரிக்க தொடங்கியதால் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த கூடாது என நிறுத்தி வைத்தது. இருந்தும் அரசு முழுதாக இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டங்கள் […]
டெல்லி: உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபட்டதாக மருத்துவர் உட்பட 7 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிப்பது சமீப காலமாக மருத்துவ உலகில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உடல் உறுப்புகளை விற்பனை நோக்கத்தில் தானம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாகும். இதனை தலைநகர் டெல்லியில் ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று […]
ஷகிப் அல் ஹசன்: நடைபெற்றது உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியா முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்கின் கருத்தை குறித்து பேசி இருக்கிறார். நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு […]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ‘D’ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. நடப்பாண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 27-வது போட்டியாக வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் […]