சென்னை :சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும்கட்சியாக உள்ளபோதும் தி.மு.க வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சித்தார்களோ அவர்களுக்கு தி.மு.க அரசு ரத்தினக் கம்பளம் விரிப்பதாக விமர்சனம் செய்தார்.
பின்னர், அமித் ஷாவை சந்திக்க சென்றது வெளிப்படையானது என்றும் வெளியே வரும்போது முகத்தை துடைத்தேனே தவிர மறைக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அரசு வாகனத்தில்தான் சென்றேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, சந்திப்பு நிறைவடைந்து திரும்பிய கார் குறித்து கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் மௌனம் காத்தார்.
காரில் இருந்த தொழிலதிபர் குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “கொடுத்த காரில் ஏறிச் செல்ல முடியாததால், கிடைத்த காரில் ஏறிச் சென்றேன். கிடைத்த காரில் ஏறிச் சென்றதால் கொடுத்த கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்.
உள்துறை அமைச்சரை சந்தித்தது மட்டுமே முக்கியம், அங்கு யாருடன் சென்றோம், வந்தோம், எதில் சென்றோம், திரும்பினோம் என்பது முக்கியமில்ல. கிடைக்கும் காரில் சென்றோம் இதேபோல ஸ்டாலினை கேட்கின்றீர்களா? விவசாயியொருவர் கட்சிக்கு பொதுச்செயலாளராக வந்தால் எவ்வளவு இன்னல்கள் வரும் என்பதற்கு நானே உதராணம்” என்றார்.
