சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்தன. மேலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால், தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் நேற்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் […]
ஓமலூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவ-29) அதிமுக கள ஆய்வு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், அந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஆளுங்கட்சியாக திமுக மீது பல குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். […]
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இ.பி.எஸ் விமர்சனம் : இது குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து 42 மாத காலம் ஆகி விட்டது. ஆனாலும், விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் செய்யவில்லை. நேற்று பெய்த […]
சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பொது, அரசு மருத்துவருக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவர் தாக்குதலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த இபிஎஸ், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கணும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும் போதுதான் அது முடிவு செய்யப்படும்” என்றார். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது […]
சென்னை : நாளை அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் […]
Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது வாக்குசாவடிகளுக்கு சென்று ஜனநாயக கடமை ஆற்றி […]
Edappadi Palaniswami: அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்று செயல் வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் களமாக மாறியுள்ளது. இந்த சூழலில், சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் […]
Edappadi K Palaniswami : முதல்வர் ஸ்டாலின் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கிய நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்தார். அப்போது,அதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியை […]
Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம். வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக […]
ADMK: தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் […]
EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். […]
ADMK: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.? இதனை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதன்படி, 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலும், […]
DMDK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொடர் இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டது. Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.? இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. […]
DMK : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது […]
EPS : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை இருதரப்பு ராசுகளும் சென்றும் ஒரு சுமுகமான முடிவு ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை […]
AIADMK : மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கமும், அரசியல் கட்சிகள் மறுபக்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலுக்கான அட்டவணை அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பாக்கப்படும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பாக பேசினார். அவர் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நான்காவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வைத்தார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் […]
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு ஆரம்பித்து இந்த கூட்டத்தொடர் 12:30 மணியளவில் நிறைவு பெற்றது. இதனை அடுத்து அரசியல் கட்சியினர் பட்ஜெட் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்தவகையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட் குறித்து செஇதயலர் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை கூறி விமர்சனத்தை முன்வைத்தார். அதன்படி அவர் கூறியதாவது, இந்த […]