இந்தியா சிமெண்ட் ஆண்டு விழாவுக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் ஆண்டு விழாவானது வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12இல் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2024 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.