Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் […]
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளைமறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தேர்தல் பரபரப்புரை செய்தார். அப்போது 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் பிரதமர் மோடி என விமர்சித்து பேசியுள்ளார். […]
Rahul Gandhi: இந்த தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு […]
Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் […]
MK Stalin: பாஜகவையும், அதிமுகவையும் புறக்கணிப்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்வு பெறுகிறது. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]
PM Modi: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போயிருக்கிறார்கள் என்று நெல்லை பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் வாகன பேரணி, கூட்டத்தில் பங்கேற்று தங்களது வேட்பாளர்களுக்கு […]
Election2024: மத்திய பாஜக சில மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சி அமைகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணியில் காங்கிரஸ் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் பரபரப்பராக நடந்து வருகிறது. சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தவகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சி […]
MK Stalin: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேர்தலுக்கு 4 நாட்கள் உள்ள நிலையில், நேற்று பாஜக தேர்தலை அறிக்கையை பிரதமர் மோடி […]
Nainar Nagendran: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன். தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
BJP Manifesto: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. வருகின்ற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் […]
ஜெயக்குமார்: பாஜகவால்தான் நான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என பாஜகவினர் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்” இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே போனது, இல்லையென்றால் நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி […]
Sellur raju: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம். தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை காண்ட்ராக்ட் காரர்களுக்கு தாரை வார்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஒப்பந்தக்காரர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது. அதிமுக வேட்பாளர்களை பார்த்தாலே அது தெரியும் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]
Annamalai : அதிமுக கட்சி டிடிவி.தினகரனிடம் இருந்தால் ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என அண்ணாமலை பேசியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால். தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக […]
Election Manifesto: கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அந்த தொகுதி வேட்பாளர் அண்ணாமலை. தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி களமிறங்கியுள்ள நிலையில், கோவை மக்களவை தொகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு […]
PM Modi: ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்தை மீண்டும் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]
Annamalai: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு கோவை ஆவாரம்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், திமுகவினர் காவல்துறையிடம் சென்று முறையிட்டனர். அதாவது நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக குற்றசாட்டியுள்ளனர். இதன்பின், பாஜக – திமுகவினர் இடையே மோதல் […]
MK Stalin: கருத்து கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு. மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதலாவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும், மத்திய பாஜக அரசை விமர்சித்தும் அவ்வப்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதில் […]
Election2024: கோவையில் அண்ணாமலை பரப்புரையின்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, […]
AIADMK: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். அதாவது, பிரதமர் மோடியின் ரோடு ஷோவை விமர்சித்திருந்த இபிஎஸ்-ஐ நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார். பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள், தமிழ்நாடு […]
Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பித்தக்க இடங்களை […]