இவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது – ஊரக வளர்ச்சி துறை உத்தரவு

The Tamil Nadu government has ordered that people over the age of 55 should not be offered jobs in the 100-day work program.

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என ஊரக வளர்ச்சி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், மீண்டும் பயன்படுத்த கூடிய முகக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி பணி செய்வதை உறுதி செய்யவேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

unknown node