பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கு மீது இன்று விசாரணை.
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு இன்று விசாரிக்கிறது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.