SSLCக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றோரும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள். 10-ஆம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உரிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், 12-ஆம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என பார் […]
தமிழக அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஜனவரி 2-ஆம் தேதி திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. அரசு கொள்முதல் செய்யாததால் குறைந்த விலைக்கு கரும்புகளை விற்க […]
கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி கருத்து. உயர்கல்வி படிக்க இளநிலை MBBS சான்றுகளை வழங்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ சான்றை வழங்க கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி […]
சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்தது உயர் நீதிமன்றம். நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த ஆணையிட்டுள்ளது. மேலும், சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் […]
அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு. கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி இழப்பை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும் என இழப்பீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. […]
கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்கக் கோரிய தந்தை கோரிக்கை நிராகரிப்பு. கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை காவல்துறைக்கு பதில் வழக்கறிஞரிடம் ஒப்படைக்க உத்தரவிட இயலாது என்று மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் உயர்நீதிமன்றம். செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது, அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயார் என தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். மாணவியின் செல்போன் பெற்றுக்கொள்ள அரசு வழக்கறிஞர் மறுத்ததுடன், விசாரணை அதிகாரிகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக உள்ளதாக […]
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு ஆணை. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை குறிப்பிட்ட வளாகத்துக்குள் நடத்திக்கொள்ள பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு குறித்து தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளது. ஜனவரி 22, 29-ஆம் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் […]
தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ராகவன் […]
சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு. மாநகராட்சி பணிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்திருந்தது. ஆனால், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான சொத்துக்குவிப்பு […]
குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என நீதிபதிகள் குற்றச்சாட்டு. கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் […]
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு. திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி மனு மீது திருப்பூர் ஆட்சியர், தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு […]
ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார். ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. சென்னை எருக்கஞ்சேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி ரவீந்தர ராம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை […]
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001-06ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு […]
கொடுத்த சொத்தை பெற்றோர் திரும்பப் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. ஒருமுறை வழங்கிய சொத்தை பாதுகாவலர் (கார்டியன்) திரும்ப பெற முடியாது என வாரிசுகளுக்கு வழங்கும் சொத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலச் சட்டத்தின் கீழ், மாற்றப்பட்ட சொத்தில் வழங்குபவரை கவனிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு […]
கோவை ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுர மீட்டரில் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் […]
ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள […]
வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என நீதிபதி கருத்து. வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். […]
பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்களை விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில், பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு, வழக்குக்காக முன்கூட்டியே தகவல் தர இயலாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த சுந்திர விமலநாதன் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு […]
மருவிய பாலினத்தவர் மற்றும் எல்ஜிபிடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி. LGBTQIA மற்றும் மருவிய பாலினத்தவர் குறித்து ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றமதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருவிய பாலினத்தவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் கொள்கை இன்னும் 3 மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் எனவும் […]
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என அர்ஜூன் சம்பத் உத்தரவாதம். புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது புகைப்படத்திற்கு பட்டை – குங்குமமிட்டு, காவி உடை அணிந்தது போன்று போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில், காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகமும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து, […]