திரிணாமுல் காங்கிரசில் இணைந்த முன்னாள் பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ ...!

முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) முறையாக இணைந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) முறையாக இணைந்தார்.

2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பாபுல் சுப்ரியோ நாடாளுமன்ற தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) முறையாக இணைந்தார். அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது பாபுல் சுப்ரியோவின் பதவி பறிக்கப்பட்டது. பல மாதங்களாக பாஜக மீது கோபமாக இருந்தபாபுல் சுப்ரியோ இன்று கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, பாபுல் சுப்ரியோவிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து டிஎம்சி -யில் இணைந்த பாபுல் சுப்ரியோ, ஒரு மாதத்திற்கு முன்பு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, அவர் தொடர்ந்து எம்.பி.யாக பணியாற்றுவார் என்று கூறினார். சுப்ரியோ தனது அரசியலமைப்பு கடமைகளை மேற்குவங்கத்தில் உள்ள தனது தொகுதியான அசன்சோலுக்கு மட்டுமே செய்வேன் என்றும், ஆனால் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறினார்.

இருப்பினும், வேறு எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்றும், தொடர்ந்து ‘சமூக பணியில்’ ஈடுபடுவேன் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

unknown node