கொல்கத்தா : கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், மருத்துவர்களும் மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) தனது […]
கொல்கத்தா : பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு தற்போது வரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நேற்று மாணவர்கள் பேரணி, இன்று கடையடைப்பு, 20 நாட்களாக தொடரும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் […]
கொல்கத்தா : வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, தற்போது வரையில் கொல்கத்தாவில் பல்வேறு வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவர் அமைப்பினர் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு […]
கொல்கத்தா : இன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு தினத்தை கொண்டாடவில்லை என்று மம்தா பேனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர பரிஷத் ( கட்சியின் மாணவர் அமைப்பு) தினமாக கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சத்ர பரிஷத் தினத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை. அதற்கான காரணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், […]
கொல்கத்தா : “பெண் மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நாட்டில் நிலவுகிறது. ” என கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் குறித்து ராகுல் காந்தி வேதனையுடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓர் கருத்தரங்கில் அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், […]
கொல்கத்தா : ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஞாயிற்று கிழமைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் ஒரு அரங்கில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது […]
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜியை தவிர இந்தியா கூட்டணியின் மாநில முதல்வர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மம்தா பேசுகையில், தனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும், மம்தா பேனர்ஜி பேசுகையில் , பாஜக மற்றும் கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு 10 -20 நிமிடங்கள் பேச […]
டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜக ஆதரவு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மம்தா பேனர்ஜியை தவிர இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் […]
டெல்லி: கன்வார் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமையாளர் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்ற மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது இந்து கடவுள் சிவனுக்கு அபிஷேகம் செய்யவதற்கு கங்கையில் இருந்து புனித நீர் எடுக்கும் ஆன்மீக நிகழ்வு இன்று முதல் கன்வார் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை எனும் பெயரில் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆன்மீக நிகழ்வு கங்கை ஆறும் ஓடும் மாநிலங்களில் நடைபெறும். இதற்கு வடமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். அண்மையில், […]
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தியாகிகள் பேரணி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய மம்தா பேனர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிகளில் 38 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால், அதனை யாராலும் […]
டெல்லி: நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) முதல் தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA தலைமையிலான ஆட்சி நடபெற்று வருகிறது. இதனால், […]
இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் இரண்டே இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதி இடைத்தேர்தலில் 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இமாச்சல்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியிலும் பாஜக வெற்றி […]
இடைத்தேர்தல் முடிவுகள்: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்ளிட்ட 13இல் 11 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர், பாஜக தலைமையிலான NDA கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நேரடியாக மோதிய […]
இடைத்தேர்தல்: தமிழகத்தில் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர் இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போல 6 வடகிழக்கு மாநிலங்களில் 12 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் கட்சி […]
டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது M வரிசையில் மணிப்பூர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என மக்களவையில் TMC எம்பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார். இன்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். அப்போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், கடந்த முறை என்ன யாரும் பேச அனுமதிக்கவில்லை. […]
மேற்கு வங்கம்: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. நாளை (ஜூன் 4) மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெற்று வந்தது. இருந்தும் சில இடங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சியினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மேற்கொள்ளும் […]
மேற்கு வங்கம்: இன்று மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குப்பதிவு இடங்கள் அதிகம் இருப்பதால், அங்குள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இறுதியாக 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு 24 பர்கானாஸிஸ் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தெற்கு 24 […]
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் இன்று 57 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவுடன் முழுதாக நிறைவுபெறுகிறது. தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் முடிவுகளை கணித்து அதற்கு ஏற்றவாறு தங்கள் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள உள்ளனர். காங்கிரஸ்,திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்துள்ள I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகின்றனர். இன்று பிற்பகல் 3 […]
பிரதமர் மோடி: தேர்தல் விதிமுறைகள் பற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அங்கு மிக பெரிய மோசடி நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேற்கு வங்கத்தில் பாஜக , மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தல் விதிமுறைகளை மீறி கடுமையாக விமர்சித்து பிரச்சாரம்/விளம்பரங்கள் செய்வதாகவும், அதனால் அத்தகைய விளம்பரங்களை வெளியிட தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு […]
டெல்லி: தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜக மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட (7ஆம் கட்ட) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் இதுவரை 33 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து இன்னும் 9 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் , தேர்தல் […]