#BREAKING: அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து சண்முகம் விலகல்!!

Former Chief Secretary Shanmugam has resigned as an advisor to the Tamil Nadu AIADMK government.

தமிழக அதிமுக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம்.

தலைமை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் அதிமுக அரசுக்கு ஆலோசகராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம். தனது ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள சூழலில் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node