#BREAKING: அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து சண்முகம் விலகல்!!

தமிழக அதிமுக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம். தலைமை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் அதிமுக அரசுக்கு ஆலோசகராக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம். தனது ராஜினாமா கடிதத்தை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள சூழலில் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் … Read more

#BREAKING: தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் நியமனம்.!

தலைமை செயலாளர் பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகராக முன்னாள் தலைமை செயலர் சண்முகம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் செய்யப்படுவார் என … Read more

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர்ஆலோசனை

தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த தாக்கம் குறைந்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.இதற்கு இடையில், உருமாறி உள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாக செய்திகள் வெளியாகி வருகிறது.இதனால் உலக நாடுகள் மீண்டும் பீதியடைந்துள்ளன. ஆகவே பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு … Read more

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு  ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார்/\. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 1ந்தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டார். இப்பொறுப்பிற்கு6  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் … Read more

தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!

தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்கி தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்பவும், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்பவும், தமிழகத்தை  சேர்ந்த அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் உயர் அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக உள்ள கணேசன், சங்கீதா, கிருஸ்துராஜ், பிரிந்தாதேவி மற்றும் அருணா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் தலைமை … Read more

செப்டம்பர் 4-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.?

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் வருகின்ற 4-ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி … Read more

1, 6, 9 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை எப்படி.? இதோ வழிகாட்டு நெறிமுறைகள்.!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், 1, 6, 9-ம் வகுப்புக்கான 2020-21-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் 10-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையும் வரும் 17-ம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும், மேல்நிலைப் … Read more

கொரோனா பரிசோதனை மட்டும் போதாது! காய்ச்சல் முகாம்களையும் நடத்த வேண்டும் – தலைமை செயலர் சண்முகம்

காய்ச்சல் முகாம்களையும் நடத்த வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை தலைமைச் செயலர் கே.சண்முகம், சென்னை தவிர இதர மாவட்டங்களின் ஆட்சியர்கள், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். மதுரை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி … Read more

தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆக உயர்வு..மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 969 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 9,527 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் … Read more

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா..பாதிப்பு 911 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 834 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 5 பேர் மூலமாக 72 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் … Read more