கோடநாடு வழக்கு மூலம் அதிமுகவை பயமுறுத்த முடியாது – ஜெயக்குமார் பேட்டி

அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார்,  அரசியலில் பண்பாடு வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் பண்பாடு கருதி நாங்கள் அவ்வாறு பேசமாட்டோம். பதவி பெறுவதற்காக அதிமுகவை பற்றி அவர் விமர்சிக்கிறார். முதல்வர் ஸ்டாலினை திருப்தி படுத்தி பதவி பெற நினைக்கிறார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. வசதியான குடும்பத்தில் பிறந்து, உழைப்பின் மூலம் பதவியில் அமர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி.

கோடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுகவை அச்சுறுத்த முடியாது. கோடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக. இந்த பூச்சாண்டி காற்ற வேலையெல்லாம் வேணாம், தகுந்த பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.