கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும் ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருவதற்கு பதிலாக […]
கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 […]
கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. […]
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தி டெல்லியை சார்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் என்பவர் தொடர்ந்து பேசு வருகிறார். இந்த வழக்கில் இருந்து தன்னை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சையான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வழக்கில் சாட்சிய பதிவிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக வேண்டிய […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து ஆணையிட்டுள்ளது. வழக்கில் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் […]
கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சனாதன சர்ச்சை விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் […]
கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. 316 பேரிடம் பெற்ற வாக்கு மூலங்கள் அடங்கிய 3,600 பக்க விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதகை நீதிமன்றம், சிபிசிஐடி போலீசிடம் தனிப்படை போலீஸ் அளித்த 3,600 பக்க விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தின் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுப்புலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 326 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். சிறப்பு காவல் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி 1,500 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார், அரசியலில் பண்பாடு வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் பண்பாடு கருதி நாங்கள் அவ்வாறு பேசமாட்டோம். பதவி பெறுவதற்காக அதிமுகவை பற்றி அவர் விமர்சிக்கிறார். முதல்வர் ஸ்டாலினை திருப்தி படுத்தி பதவி பெற நினைக்கிறார். […]
கோடநாடு வழக்கில் பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன என காவல்துறை தரப்பில் விளக்கம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள், புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை […]
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விசாரணையில் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜரானார். கோடநாடு வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜித்தன்ஜாய், ஜம் சீர் அலி ஆகியோர் ஆஜரான நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை உதகை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான் இருவருக்கு வழங்கப்பட ஜாமீன் நிபந்தனையில் மாற்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஆணியிடப்பட்டுள்ளது. உதகையில் தங்கியிருந்து திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி நீதிமன்ற அனுமதி […]
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல […]
கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் […]
கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரிக்கப்படும் சயான் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவ இவரிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் […]
கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், இன்று 3வது நாளாக தனிப்படையினர் விசாரிக்கின்றனர். கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப். 24-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக […]
கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அதிமுக பிரமுகர் […]
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இதனைத் தொடர்ந்து,கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் என்பதன் அடிப்படையிலும், […]