மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

edappadi palanisamy about jallikattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உழவர் தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உழவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி … Read more

OPS தரப்பு வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை – இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

INBADURAI

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர்பேடு உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த … Read more

ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

o panneerselvam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு … Read more

ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

o panneerselvam

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக … Read more

அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு! அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி!

ashok kumar

பாஜக மாநில ஓபிசி அணியின் மாநில துணை தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகிய அசோக்குமார், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார். மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை அசோக்குமார் மேற்கொண்டு வந்தார். ஈரோடு தொகுதியை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் செலவழித்து வந்துள்ளார் ஆற்றல் அசோக்குமார். இந்த சூழலில் கடந்த … Read more

நெருங்கும் தேர்தல்.. அதிமுக வியூகம் என்ன.? இன்று முக்கிய ஆலோசனை.!

ADMK Secretary Edappadi Palanisamy

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துளளது. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று (நவம்பர் 21) மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலக எம்ஜிஆர் மாளிகையில் வைத்து அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. அதிமுக முன்னாள் அமைச்சர் வெற்றியை எதிர்த்து … Read more

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது… அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

political leaders

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க செய்யாறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2-ம் தேதி விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட … Read more

தனி நீதிபதி உத்தரவு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை!

O PANNEERSELVAM

அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், இதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது … Read more

தீபாவளி போனஸ் வழங்குவதில் பாகுபாடு.! திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

Edappadi K Palaniswami

தீபாவளி பண்டிகையானது நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசு அனைத்துப் பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் 20% சதவீதம் போனஸ் ஆக வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10% போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டது. தற்போது, 20% போனஸ் அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் … Read more

அதிமுக கொடி, பெயர், சின்னம் – ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

opanneerselvam

அதிமுகவின் கொடி, பெயர் மற்றும் சின்னத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு உள்கட்சி தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். … Read more