கமிசன் – கலெக்சன் – கரப்ஷன்.! 4 முதலமைச்சர்கள்.! ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் கடும் விமர்சனம்.!

திமுக ஆட்சியில் 4 முதலைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருகின்றனர். -

திமுக ஆட்சியில் 4 முதலைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருகின்றனர். – ஆர்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றசாட்டு.

அதிமுக கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது போல இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக ஆட்சியில் விலையேற்றம் கண்டுள்ள மின்கட்டணதிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசி வரும் இபிஎஸ் திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அதில், கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. திமுக ஆட்சியில் 4 முதலைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மனைவி துர்கா ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

இந்த ஆட்சியில் கமிஷன் – கலெக்சன், கரப்ஷன் இவை சரியாக நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. எல்லா துறைகளிலும் ஊழல் இருக்கிறது. நாட்டு மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையையும் செய்யவில்லை என சரமாரி குற்றசாட்டுகளை இபிஎஸ் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

கமிசன் – கலெக்சன் – கரப்ஷன்.! 4 முதலமைச்சர்கள்.! ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் கடும் விமர்சனம்.!