ஹெச்1பி விசா கட்டண உயர்வு யாருக்கெல்லாம் பொருந்தும்? – அமெரிக்கா புதிய விளக்கம்.!

ஏற்கனவே எச்1-பி விசா வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த நடைமுறை பொருந்தாது என வெள்ளை மாளிகை தெளிவுப்படுத்தியுள்ளது.

H-1B visa

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், , H1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுதோறும் $100,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் விதிக்கும் அதிரடி உத்தரவை அறிவித்தார். இந்த மாற்றம் செப்டம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்கவும், ஹெச்1பி விசா திட்டத்தின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வேலை பறிபோகும் , புதியதாக இந்தியர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்வதில் சிரமம் உருவாகியுள்ளது.

ஆம், இப்பொது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, குடியேற்ற வழக்கறிஞர்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் தற்போது வெளிநாட்டில் உள்ள H-1B தொழிலாளர்கள் காலக்கெடுவிற்கு முன்பு திரும்பி வரத் தவறினால் சிக்கித் தவிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தனர். மறு நுழைவுக்கும் USD 100,000 கட்டணம் பொருந்தும் என்று பலர் அஞ்சினர்.

இந்த நிலையில், விசா கட்டணம் குறித்த அமெரிக்க அதிபரின் நேற்றைய அறிவிப்பு புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையின் தெளிவுபடுத்தலின்படி, இந்த 1,00,000 கட்டணம் புதிதாக H-1B விசாவிற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்கள் அல்லது விசாவை புதுப்பிக்க விரும்புவோருக்கு இந்த கட்டணம் பொருந்தாது.

ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு இந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை பயணத்தை தவிர்க்குமாறு சில நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

unknown node