ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து மஸ்க், விலகுவதற்கு ஆதரவாக ட்விட்டர் பயனர்கள் வாக்களித்துள்ளனர்.
ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், அதன் பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார். அந்த கருத்துக்கணிப்பில், தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்று கேட்டிருந்தார். மாலை 5 மணியோடு முடிவடையும் இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
கடந்த அக்டோபரில் ட்விட்டரை தன் வசப்படுத்திய பிறகு எலான் மஸ்க், மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளுக்காக பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டார். இந்த நிலையில் மஸ்க், பதிவிட்டிருந்த ட்விட்டர் கருத்துக்கணிப்பில் 1.75 கோடி ட்விட்டர் பயனாளர்கள் வாக்களித்திருந்தனர்.
இந்த கருத்துக்கணிப்பு முடிவில் மஸ்க்கிற்கு எதிராக 57.5% பயனர்கள் வாக்களித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக 42.5% பயனர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அறிவித்திருந்த மஸ்க், தான் கூறியபடி பதவி விலகுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கமுடியும்.
unknown node