Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று எலோன் மஸ்க் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அன்று எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்பது நமக்கு தெரியும். அவர் வாங்கியவுடன் பல அதிரடி மாற்றங்களை அதில் கொண்டு வந்தார் என்பதும் நமக்கு தெரிந்ததே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் […]
Elon Musk: இந்தியாவில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவை மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரியை குறைக்கும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதாவது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட […]
பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார். அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் […]
உலகளவில் பொதுவான சமூக வலைதளமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொதுவெளி தளமாக அமைந்துள்ளது எக்ஸ் சமுக வலைதளம். டிவிட்டர் என முன்னதாக அழைக்கப்பட்டு வந்த இந்த சமூக வலைதளம் எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. பல்வேறு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வரையில் வெளியிடப்படும் பொதுவெளி தளமாக விளங்கிய இந்த X சமூக வலைதளம் தற்போது சில நிமிடங்களாக முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா என உலகளாவிய அளவில் இந்த […]
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். […]
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 1400 பேர் உயிரிழந்தனர். மேலும் கிட்புட்ஸில் இருந்த பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் சுமார் 14 ஆயிரம் பேர் […]
அமெரிக்க ஆன்லைன் தளமான சப்ஸ்டேக்-ஐ வாங்கும் விருப்பத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும் ட்விட்டரின் புதிய தலைவருமான எலான் மஸ்க், அமெரிக்காவின் ஆன்லைன் தளமான சப்ஸ்டேக்-ஐ(Substack) வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். சப்ஸ்டேக் (Substack) என்பது சந்தா அடிப்படையில் எழுத்தாளர்கள் மற்றும் போட்காஸ்ட் துறையில் சுதந்திரமாக தங்களது படைப்புகளை வெளியிடும் ஒரு தளமாகும். ட்விட்டர் பயனர் ஒருவர் மஸ்க்கிடம், சப்ஸ்டாக்கை வாங்குவது மற்றும் ட்விட்டருடன் இரண்டு தளங்களையும் இணைப்பது அர்த்தமுள்ளதாக இருக்குமா? என்று கேட்டிருந்தார். ட்விட்டர் மற்றும் […]
டிவிட்டரில் அரசுக்கு எதிராக பதிவிடும் பதிவுகளை தடுக்க (தணிக்கை செய்ய) டிவிட்டருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்தது. – எலான் மஸ்க். பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தின் புதிய தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்னர் நாளுக்கு நாள் டிவிட்டர் தளமே பேசுபொருளாக மாறி வருகிறது. அந்தளவுக்கு தினம் தினம் புது புது செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் தான் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வாக்கெடுப்பு நடத்தில் பயனர்கள் அவரை டிவிட்டர் […]
ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து மஸ்க், விலகுவதற்கு ஆதரவாக ட்விட்டர் பயனர்கள் வாக்களித்துள்ளனர். ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், அதன் பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார். அந்த கருத்துக்கணிப்பில், தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்று கேட்டிருந்தார். மாலை 5 மணியோடு முடிவடையும் இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். கடந்த அக்டோபரில் ட்விட்டரை தன் வசப்படுத்திய பிறகு எலான் மஸ்க், மேற்கொண்ட பல அதிரடி […]
ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா என்று அதன் தலைவர் எலான் மஸ்க், பயனர்களிடம் கேட்டுள்ளார். ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அந்த கருத்துக்கணிப்பில் தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? என்று கேட்டுள்ளார். மேலும் இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ட்விட்டர், எலான் மஸ்க் தலைமையின் கீழ் வந்தபிறகு மஸ்க் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக […]
எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட். உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான லூயிஸ் வுட்டன் தலைமை நிறுவனமான LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட், 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆகியிருக்கிறார். ஃபோர்ப்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் இன் அறிக்கையின்படி 164 பில்லியன் டாலர்(13.55 லட்சம் கோடி ரூபாய்) சொத்துமதிப்புள்ள எலான் மஸ்க்கை விட, 171 பில்லியன் டாலர்(14.12 […]
ஆப்பிள் மற்றும் கூகுள், நிறுவனங்கள் ட்விட்டரை தடை செய்தால், நான் வேறு ஸ்மார்ட் போனை உருவாக்குவேன் என மஸ்க் கூறியுள்ளார். ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால், சொந்தமாக புதிய ஓ.எஸ்(OS) மற்றும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவேன் என்று ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க், மறைமுகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க கன்சர்வேட்டிவ் (பழமைவாத) அரசியல் விமர்சகர் லிஸ் வீலர், ட்விட்டரில் இது குறித்து கேட்ட கேள்விக்கு மஸ்க் பதிலளித்துள்ளார். If Apple […]
எலான் மஸ்க், ட்விட்டரின் சரிபார்க்கப்பட்ட ப்ளூ பேட்ஜ்களை அடுத்தவாரம் புதிய நிறங்களில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறார். ட்விட்டரின் ‘சரிபார்க்கப்பட்ட ப்ளூ’ சேவையை எலான் மஸ்க் அடுத்தவாரம் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் போலிக்கணக்குகளை முடக்குவதற்காக ‘ட்விட்டர் ப்ளூ பேட்ஜ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தும் மஸ்க் கூறியதாவது, தாமதத்திற்கு மன்னிக்கவும். நாங்கள் இந்த மேம்படுத்தப்பட்ட சேவையில் சில மாற்றங்களுடன் அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்துகிறோம். இதன்படி நிறுவனங்களுக்கு தங்க(Gold) நிறமும், அரசாங்க கணக்குகளுக்கு […]
எலான் மஸ்க்கைப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு தற்போது இயங்கி வந்தாலும் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. ஐந்து பேர் உயிரிழந்த கலவரத்தைத் தூண்டியதாகவும், தளத்தின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகவும் டிரம்பின் கணக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பை […]
நாசாவானது சந்திரனுக்கு செல்லும் ஆர்ட்டெமிஸின் இரண்டாவது விண்கலம் $1.15 பில்லியன் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. நாசா, 2வது ஆர்டெமிஸ் சந்திரனுக்கு (மூன் லேண்டரின்) செல்லும் விண்கலத்தின் 1.15 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நாசாவின் இந்த செயலை பாராட்டும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நாசாவின் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாது என்று ட்வீட் செய்திருந்தார். நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து […]
எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் தொடங்குவது குறித்து ட்விட்டர் கருத்துக்கணிப்பைக் கேட்டுள்ளார். எலான் மஸ்க், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் விதமாக, ட்விட்டரில் கருத்துக்கணிப்பைக் கேட்டுள்ளார், மக்களின் குரல் கடவுளின் குரல் என்பதால் உங்களிடம் கருத்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலுக்குப் பிறகு, வன்முறையைத் தூண்டும் ஆபத்து காரணமாக ட்ரம்ப் 2021 இல் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாகத் […]
ட்விட்டரின் நீலக்குறியீடு அடுத்த வாரத்தின் இறுதிக்குள் திரும்பவும் வந்துவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ட்விட்டரின் நீலக்குறியீடு அரசியல்வாதிகள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பொது நபர்களுக்கு வழங்கப்பட்டுவந்தது, ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரின் வருமானத்தை கணக்கிட்டு, மாதம் $8 செலுத்தி யார் வேண்டுமானாலும் இந்த நீலக்குறியீடைப்பெறலாம் என அறிவித்திருந்தார். ஆனால் ட்விட்டரில் நிறைய போலிக்கணக்குகள் மாதம் $8 செலுத்தி நீலக்குறியீடு பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அடுத்து ட்விட்டரின் தலைவர் எலான் மஸ்க் கடந்த […]
ட்விட்டர் ஊழியர்களை, அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு கூறி அதன் தலைவர் எலான் மஸ்க், அவர்களுக்கு முதல் இ-மெயில் அனுப்பியுள்ளார். ட்விட்டரின் தலைமை பொறுப்பேற்று 2 வாரங்கள் ஆன நிலையில், அதற்குள் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டார். ட்விட்டரின் பணியாளர்களை நீக்கியது, ப்ளூ டிக் சப்ஸ்கிரிப்சன் அம்சத்திற்கு மாதம் $8 விலை என பல அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தற்போது ட்விட்டரின் பணியாளர்களுக்கு, அதன் தலைவர் எலான் மஸ்க் முதன்முறையாக இ-மெயில் அனுப்பியுள்ளார். மஸ்க் இ-மெயிலில் கூறியதாவது, […]
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார். டெஸ்லாவின் தலைமை அதிகாரி மற்றும் ட்விட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க், $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லாவின் பங்குகளை விற்றுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $15.4 பில்லியன் மதிப்புள்ள அதன் பங்குகளை விற்றார், இதன் மூலம் மொத்தமாக டெஸ்லாவின் $20 பில்லியன் பங்குகளை மஸ்க் விற்றுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் டெஸ்லா பங்குகளை விற்க […]