சென்னை உயர் நீதிமன்ற மாடியில் இருந்து பெண் குதித்ததால் பரபரப்பு.!

வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த சிறுமி முதல் மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

Highcourt -SuicideAttempt

சென்னை :சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் இன்று நிகழ்ந்தது. ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான அந்தச் சிறுமி, தன்னை காப்பகத்தில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் மனமுடைந்து, முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி, காவல்துறையினரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கு குடும்பப் பிரச்னை தொடர்பானது எனவும், சிறுமியின் தாய் மறுமணம் செய்து கொண்டதால் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.