சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் முயற்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்களை திருப்பி அனுப்பும் போது அவர்களின் கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க பயணம் […]
சென்னை : திரைப்பட தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. திரைப்படத் தயாரிப்புக்காகக் கடன் வாங்கிய தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் சிக்கலில் சிக்கியுள்ளனர். சென்னை டி.நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் பங்களாவின் ஒரு பகுதியை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ரூ.3.74 கோடி […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து இருந்தார். இது தொடர்பான வழக்குகள் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த நிலையில், இதனை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் பெயரில், சீமான் வீட்டில் சம்மன் ஒட்டி, அதனை ஒருவர் கிழித்து அதன் பிறகான பல்வேறு களோபரங்களுக்கு பிறகு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் ஆஜராகி காவல்துறை கேள்விகளுக்கு விளக்கம் அளித்து […]
சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை முன்பு மிக பிரமாண்டமாக நடைபெறும். அதே போல வரும் புதன் கிழமை (பிப்ரவரி 26) மாலை 6 மணிக்கு இந்த வருட சிவராத்திரி விழா தொடங்கி மறுநாள் (பிப்ரவரி 27) காலை 6 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் அமித்ஷா, […]
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. இரட்டை இலை தொடர்பான விவகாரம் என்பது உட்கட்சி விவகாரம் என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிடக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் முன்னதாக, அதிமுக […]
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர் கோடு முறையில் விற்பனை நடைமுறைக்கு வருகிறது. அதாவது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024 ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் டிச,4ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது. தீபாவளிக்கு திரையரங்கில் வெளியான அமரன் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி […]
சென்னை : இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும் போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. […]
சென்னை : சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் வரும் நவம்பர் 14 (வியாழன்) அன்று பான் இந்தியா படமாக தமிழ் , ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. நாளை மறுநாள் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. மும்பையை சேர்ந்த Fuel டெக்னாலஜி எனும் நிறுவனம் கங்குவா பட தயாரிப்பு நிறுவனம் […]
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முழு தொகையையும் ரிலையன்ஸ்-க்கு இன்று செலுத்தப்பட்டதாக கூறியதை அடுத்து, படத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் […]
சென்னை : வரும் அக்டோபர் 12 விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். இந்த ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக , தமிழ்நாட்டில் 58 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழக காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் 42 இடங்களில் அனுமதி அளித்து, 16 இடங்களில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு அனுமதி […]
சென்னை : பெண்காவலர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் யூ-டியூபில் கருத்து தெரிவித்ததற்காக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அவர் மீது கஞ்சா வைத்திருந்த வழக்கும் பதியப்பட்டது. இந்த வழக்குகளை அடுத்து சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை பதிவுசெய்தார். இந்த குண்டர் சட்டமானது முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து, சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கின் கீழ் மீண்டும் […]
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி அவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த போக்ஸோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். குழந்தைகளின் ஆபாச படத்தை அந்த இளைஞர் தன் மொபைல் போனில் வைத்திருந்தார். ஆனால் , அதனை யாருடனும் பகிரவில்லை என்ற அந்த இளைஞர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு போக்ஸோ வழக்கை […]
சென்னை : பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதி குடிசை மாற்றுவாரிய கட்டடப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது காவல்துறைக்கு தெரியுமா.? தெரியாதா.? பெரும்பாலான இடங்களில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். […]
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA தர சான்று பெற வேண்டும் என இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னையில் இன்றும் நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரம் அளவுக்கு 19 திருப்பங்களை கொண்ட இரவு நேர […]
சென்னை : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், தவறை மறைக்க முயற்சித்த பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என […]
சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா மற்றும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 உடன் மோதவுள்ளது. முன்னதாக, கடன் பிரச்னையில் படத்தை வெளியிடும் முன் 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என […]
சென்னை: கடந்த 2017இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்றனர். தமிழகத்தில் புகையிலை, குட்கா பயன்பாடு அதிகரித்துள்ளது எனும் குற்றசாட்டை தமிழக சட்டப்பேரவையில் குறிப்பிட குட்கா கொண்டுசெல்லப்பட்டதாக கூறினர். சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக அப்போதைய சட்டமன்ற உரிமை மீட்பு குழு , மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பதில் அளிக்க வேண்டும் என […]
தூத்துக்குடி துப்பாக்கிசூடு : கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்ப்பட்ட வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைத்தது. மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்த வழக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் […]
சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து முடித்து வைத்திருந்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. […]