Sophia Leone Death: உலக அளவில் பிரபலமான ஆபாசப் பட நடிகை சோபியா லியோன் தனது 26வது உயிரிழந்தார், வீட்டில் இருந்து அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில், ஆபாச படங்களில் நடித்து வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 4-வது நபராக சோபியா லியோனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More – காசாவுக்கு நல்லது செய்ய நினைத்த அமெரிக்கா…5 பேர் உயிரை காவு வாங்கிய பாராசூட்.! அமெரிக்காவின் மியாமி நகரை […]
திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, குடும்ப சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூரில் வசித்து வந்த […]
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதிமசூத் – சௌமியா. இவர்கள் மிக்ஜாம் பாதிப்பின் போது கடந்த 6-ஆம் தேதி சௌமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவரது கணவன் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர். அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சௌமியாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மருத்துவமனையின் பிணவறை பணியாளர்கள் இறந்த குழந்தையை துணி சுற்றாமல் […]
சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் கொருக்குப்பேட்டையில் நேற்று முன்தினம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருள்கள் பெறுவதற்காக ஏராளமானோா் வரிசையில் காத்து நின்றனா். அதில், நிவாரண பொருட்கள் வாங்க வந்த தண்டையாா்பேட்டை சாஸ்திரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த யுவஸ்ரீ (14) என்ற சிறுமி ஒருவர் காத்திருந்தாா். நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து சென்றுவிட்டார். அப்போது, நிவாரண பொருட்கள் வாங்க கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றிருந்த […]
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரிவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஆய்வு செய்து வருகிறது வருமான வரித்துறை. அதன்படி, அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று […]
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் காவல்துறை விசாரணை என தகவல். மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணை தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்தான் மரண வழக்கில் 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்பி மஸ்தான் கடந்த 22ம் தேதி காரில் சென்றபோது நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தற்போது 5 பேரை பிடித்துச்சென்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து […]
கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை கார் வெடி விபத்து வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணை. கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. கோவை கார் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு […]
ரயில் முன் தள்ளி மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ஆகிய இருவரும் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், எதிரில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த […]
அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிசிடி போலீசார் விசாரணை. அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வன்முறை தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி மகாலிங்கம் விளக்கமளித்து வருகிறார். கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளை […]
யாரேனும் புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரிக்கை. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதன்பின் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளி வாகனங்கள், பள்ளியில் இருந்த சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் ஆறுமுகசாமி ஆணையம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால், முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, 3 வாரம் […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் இந்த குழுவிடம் […]
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் அமைந்துள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மனைவி ஸ்ரீமதி கடந்த 13-ஆம் தேதி மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர்கள் மாணவி தற்கொலை செய்யவில்லை, அவரது மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில் […]
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக பல்வேறுசர்ச்சைகள் எழுந்த நிலையில்,அவரது மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு,ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக,அண்மையில் மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் 2-ஆவது விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வு பிரிவு தாக்கல் செய்தது. தமிழக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிறப்பு புலனாய்வு பிரிவு. அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் அளித்து, கடந்த 2012ல் ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். ராமஜெயம் கொலை […]
கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் […]
கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரிக்கப்படும் சயான் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவ இவரிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் […]
காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று விஜயலட்சுமி என்பாரின் வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காவல் நிலையம் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என்றும் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.