#BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையிலான காவல் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்கின்றனர். உளவுத்துறை வீடியோ ஆதாரங்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினருடன் தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்கின்றனர்.