கோவை கார் வெடி விபத்து – மீண்டும் நாளை விசாரணை!
கோவை கார் வெடி விபத்து வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணை.
கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. கோவை கார் வெடி விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்த நிலையில், 5 பேரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். விசாரணை மனுவை மீண்டும் நாளை விசாரிப்பதாக நீதிபதி இளவழகன் தெரிவித்ததையடுத்து 5 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவலில் எடுத்து விசாரணை செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.