சென்னை : இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும் போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. […]
சென்னை : இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என ஒரு ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், சென்னை உயர்நீதி மன்றம் பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தற்காலிமாக தடை விதித்துள்ளதாக உத்தரவிட்டுள்ளது. பிசாசு 2 படம் வெளியாகாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் வைத்துள்ள கடன் பிரச்சினை தான். ஏனென்றால், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரிப்பதற்கு முன்பு […]
சென்னை : சென்னை ஆற்காடு சாலையில், தனக்கு உரிய ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை, 20 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 1996-ல் நளினி பாய் என்பவரிடம் இருந்து கோடம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் ஐந்து மைதானங்கள் மற்றும் 454 சதுர அடி நிலம் வாங்கப்பட்டு, 3.58 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திடீரென வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம், காலக்கெடு முடிவதற்குள் அதிக பணத்தை […]
சென்னை : நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது வடிவேலு ஒரு படத்தில் தன்னுடன் நடித்து யாராவது பிரபலமான நடிகர் ஆகிவிட்டார்கள் என்றால் […]
சென்னை : செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி கிளெமென்ட் ரூபின், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், வேலை அல்லது விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் போது அவற்றை பராமரிப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி சேர்க்கின்றனர். ஆனால், நாட்டில் முறைப்படுத்தப்படாத பராமரிப்பு மையங்கள் […]
Supreme Court: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி முறைகேடாக ஒதுக்கியதாக புகாா் எழுந்தது. இதன்பின் கடந்த 2012 அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமிக்கு எதிரான […]
MDMK : வைகோவின் மதிமுகவிற்கு பம்பர சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் விறுவிறுப்பாக வெட்பமானு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மக்களவை தேர்தலில் […]
OPS: இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மாற்றம் லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், தனி நீதிபதி விதித்த தடையை விலக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் […]
High Court :கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கு எதிராக கோவை மாவட்ட பாஜக சார்பில் சென்னை உயநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற நிலையில், பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினார். Read More – பிரதமர் மோடியின் பேரணிக்கு […]
PM Modi : கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து காவல்துறை கூறியதாவது, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை என்றும் பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் அனுமதி மறுத்திருப்பதாக விளக்கமளித்தது. Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.! மேலும், […]
Anand Venkatesh: ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. Read More – பள்ளிக்கல்வி […]
Chennai High Court : கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரை சேர்ந்த 5 பேர் […]
OPS: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவர் மகன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.77 கோடி அளவிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து […]
Chennai High Court : தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியதற்கு எதிராக டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, பாஜகவுக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கியதற்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையாமிடமும் அவர் கோரிக்கை மனுவும் அளித்திருந்தார். Read More – ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்க […]
Senthil Balaji : தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால்இந்த கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணை வட்டத்தில் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளார். அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கானது எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பல்வேறு முறை உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை […]
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2006 முதல் 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த போது வீட்டுவசதி துறைக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகருக்கு மாற்றியது என அவர் மீது வழக்கு பதியப்பட்டது. 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத்துறை சார்பில் பதியப்பட்ட இந்த வழக்கானது எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று […]
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். அப்போது விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, பெருநாழி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி தேர்தலின் போது விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாகவும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட […]
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதன்பின் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட பிறகு அமலாக்கத்துறை, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி நீதிமன்ற […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜனவரி 2ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்தும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் […]
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன்பின், செந்தில் பாலாஜியின் தொடர்ந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் […]