சமூக நீதிக்காக திமுக என்ன செய்திருக்கிறது? – சீமான் கேள்வி

Seeman, the chief coordinator of the Naam Tamil Party, said that it is not acceptable to say that Dravidian history is Tamil history.

திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

சமூக நீதி என்றால் என்ன? மக்களுக்கு திமுக செய்த சமூக நீதி என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினர் என்பதை நான் எதிர்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது.  மறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நோக்கியா ஆலை மூடப்பட்டது. தற்போது ஃபோர்டு ஆலை மூடப்படுகிறது என கூறினார். வளர்ச்சி என்ற பெயரில் கட்டமைப்பை முதலாளிகளுக்காக உருவாக்கப்படுகிறது.

மக்களுக்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர் கிடைக்கிதோ இல்லையோ, முதலாளிகளுக்கு கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், என்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றிவிடுவேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்காக திமுக என்ன செய்திருக்கிறது? – சீமான் கேள்வி