மதுரை : மாநாட்டில் விஜய்யின் பேச்சு ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்கள் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார். இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை காந்திபுரம் பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். அப்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகளை இன்று விஜய் அறிவித்துள்ள நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்கிறார் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. நேற்று இரவு முதலே திரளான தொண்டர்கள் மாநாடு திடலை நோக்கி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது வரையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர். இந்த மாநாட்டில் காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர் ,வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்அவுட்கள் பற்றியும், தவெக மாநாடு பற்றியும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மதுரையில் செய்தியாளர்களிடம் […]
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நான் நெய்தல் படை அமைப்பேன் என நான் கூறினால் சிரிக்கிறார்கள். நான் கூறியதை போல தானே கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவில் நெய்தல் படை ஆரம்பித்துள்ளார். அப்போ, பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியது தானே. கடலில் என் மக்களை என் நாட்டு ராணுவம் காப்பாற்றவில்லை. அப்படி […]
கிருஷ்ணகிரி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அதிலும், நிர்வாகி கரு.பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “14 ஆண்டுகளாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சி ஆரம்பித்தோம், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம், பலமுறை […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டதும் அவர் இன்று ஜாமீனில் வெளியே வரவுள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை வரவேற்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவரை வரவேற்று பதிவிட்டிருந்தார். அதில், ‘ சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். […]
புதுக்கோட்டை : சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் சீமான், தவெக கட்சியின் தலைவர் விஜய் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசி இருக்கிறார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘விஜய், மக்கள் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு மாலை அணிவித்ததை எப்படி பார்க்கிறிர்கள்?’ என சீமானிடம் கேள்வி […]
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றி க் கழகம் கட்சியுடன் 2026 தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு , ” நான் தனித்து தான் போட்டியிடுவேன். என்கூட சேர வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதனை முடிவு ” செய்ய வேண்டும் என விஜய் பெயரை கூட குறிப்பிடாமல் சீமான் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இதுநாள் வரையில், தம்பி விஜய் எனக் கூறிக்கொண்டிருந்த சீமான், […]
சென்னை : நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியை ‘சண்டாளன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடி இருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதன் விளைவாகச் […]
திருச்சி : அதிமுக மற்றும் தவெக-வுடன் கூட்டணியா? நடப்பதைப்பற்றி பேசுங்கள் என நிருபரின் கேள்விக்கு நகைப்புடன் பதிலளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அரசியல் என வந்துவிட்டாலே அரசல் புரசலாக புரளி கிளம்புவது வழக்கம். அதற்கு தூபம் ஏற்றுவதுபோல் கட்சி தலைவர்களின் பேச்சும் சில நேரங்களில் சிதறித்தான் விடுகிறது. அந்த வகையில், சீமான் விஜயின் தவெக கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த விதம், கூட்டணிக்கான சம்மதத்தை தெரிவிக்கும் தோணியில் இருந்ததாக அரசியல் […]
திருவாரூர் : புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய்க்காகப் பேசுவதற்கு அண்ணனாக நான் இருக்கிறேன் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது சீமான் பேசி இருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே அமைந்துள்ள “அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்” ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மீனவர்கள், உக்ரைன் போர் மற்றும் விஜய் கட்சியின் கோடி அறிமுகத்தைப் பற்றியும் சீமான் பேசி இருந்தார். தமிழக மீனவர்கள் பற்றிய கருத்து ..! தமிழக மீனவர்களைப் பற்றிய கேள்வி எழுந்த நிலையில், […]
சென்னை : யானை ஒரு மாநிலத்திற்கோ, ஒரு கட்சிக்கோ சொந்தமில்லை என விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல், உறுதிமொழி ஆகியவற்றை வெளியிட்டார். த.வெ.க கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள், வாகை மலர், கொடியின் நிறம் பற்றிய விளக்கங்களை மாநாட்டில் அறிவிப்பதாகஅவர் கூறினார். அதற்குள், இணையவாசிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரையில் த.வெ.க கட்சிக்கொடி பற்றி […]
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி உடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு மற்றும் நட்புறவான பதில்களையே அளித்து வருகின்றனர். விஜயின் அரசியல் பயணம் ஆரம்பமாகும் முன்னரே அவர் கட்சி பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாக மக்கள் முன் கடந்து செல்கிறது. திரையில் உச்சநட்சித்திரமாக கோலோச்சி கொண்டிருக்கும் வேளையில் விஜயின் “தேர்தல் அரசியல்” முடிவு பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் […]
சென்னை : த.வெ.க தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை தமிழக அரசியல் தலைவர்கள் கனிமொழி , சீமான் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நடச்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதன் பிறகு அண்மையில், மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் […]
சென்னை: அவதூறு பேச்சின் ஆதித்தாய் திமுக தான் என்றும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறிய பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் சீமான் இன்று செய்தியாளர்களிடம் முன்வைத்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுக பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அப்போது குறிப்பிட்ட பட்டியலினம் பற்றி குறிப்பிட்டதாக கூறி, திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் […]
இந்தியன் 2 : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்தியன் 2 படத்தினை பார்த்துவிட்டு மக்கள் மற்றும் திரைபிரபலங்கள், தங்களுடைய விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்துவிட்டு இந்தியன் 2 திரைப்படத்தை சமூக மாற்றத்திற்காக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் படத்தினைப் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் ” நானும் என்னுடைய அண்ணன் கமல்ஹாசனும் ஒரே ஊர் காரர். அவருடைய […]
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு தலைவருக்கான பண்பு இல்லை என அமைச்சர் கீதாஜீவன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுகவினர் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். மேலும் இதுபற்றி பாடல் ஒன்றையும் குறிப்பிட்டார். இதனை அடுத்து, சாதிய ரீதியில் கலைஞர் கருணாநிதியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக கூறி திருச்சி சைபர் கிரைம் பிரிவு […]
விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில வாரங்களாக விக்கிரவண்டியில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். […]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையை அடுத்து பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் சென்னையில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக சென்னையில் நடைபெற்று வரும் ’தளபதி விஜய் கல்வி விருது’ வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். விஜய் செய்யும் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை […]
சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ள புது படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]