Tag: Naam Tamilar Katchi

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி, நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவருக்கு உடனடியாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய நபராக வலம் வந்த நிலையில், இன்று மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, சமீப நாட்களாக […]

#NTK 3 Min Read
Vithya Rani - NTK

நாதகவில் விலகல்.. அடுத்தது தவெகவா? திமுகவா? காளியம்மாள் சொன்ன பதில்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் தான் கட்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக அண்மையில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட காளியம்மாளின் பெயரானது சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தான் அவர் விலகவுள்ள தகவலும் உறுதியானது. அதன்பிறகு அவரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு ” இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், […]

#DMK 5 Min Read
DMK tvk vijay kaliyammal

“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!

சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக ஜனவரி 28 அன்று, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர், சேலம் […]

#NTK 6 Min Read
tvk vijay ntk seeman

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த பிறகும், தந்தை பெரியார் குறித்து கடும் விமர்சனங்களை சீமான் முன்வைக்க தொடங்கியதை அடுத்தும் இந்த விலகல்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த விலகல் லிஸ்டில் சில மாதங்களுக்கு முன்னரே அடிபட்ட பெயர்களில் நாம் தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பெயரும் […]

#NTK 8 Min Read
kaliyammal tvk

இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், தற்போது காளியம்மாள் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாகவே கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி கொண்டு இருந்தது. இதனையடுத்து நானே இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என காளியம்மாள் கூறியிருந்த நிலையில், தற்போது […]

#NTK 9 Min Read
kaliyammal seeman

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், இன்று முக்கிய பொறுப்பில் இருந்த காளியம்மாளும் விலகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனென்றால், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு […]

#NTK 6 Min Read
kaliyammal ntk seeman

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஜனவரி 28 அன்று, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர், சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாதகவில் இருந்து விலகினர். […]

#NTK 5 Min Read
kaliyammal NTK

‘கட்சியை அழிவுக்கு கொண்டு செல்லும் சீமான்’ – நாதக கொ.ப.செ தமிழரசன் விலகல்.!

சென்னை : கடந்த சில நாட்களாக  நாம் தமிழர் கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அம்பத்தூர் கோ. தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் ஆரம்பம் முதல் நாம் தமிழர் கட்சியுடைய மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். இது தொடர்பாக தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து கட்சியை […]

#NTK 5 Min Read
seeman - ntk

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி! 

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ‘நாம் தமிழர் கட்சி’. அப்போது முதல் இக்கட்சி பல்வேறு தேர்தல் களங்களை கண்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தை பெற்று வருகிறது. இருந்தும் மாநில கட்சி அங்கீகாரம் பெரும் அளவுக்கு வாக்கு சதவீதத்தை எட்டாது இருந்தது. இந்நிலையில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 விகித வாக்கு சதவீதத்தை ஒட்டுமொத்தமாக பெற்றது. தேர்தல் ஆணைய விதிப்படி […]

#NTK 5 Min Read
NTK Leader Seeman

பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது! இந்தியன் 2 குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

இந்தியன் 2 : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்தியன் 2 படத்தினை பார்த்துவிட்டு மக்கள் மற்றும் திரைபிரபலங்கள், தங்களுடைய விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்துவிட்டு இந்தியன் 2 திரைப்படத்தை சமூக மாற்றத்திற்காக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் படத்தினைப் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் ” நானும் என்னுடைய அண்ணன் கமல்ஹாசனும் ஒரே ஊர் காரர். அவருடைய […]

#Seeman 5 Min Read
seeman about indian 2

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக சார்பில் அபிநயா போட்டி – சீமான் அறிவிப்பு!

விக்கிரவாண்டி : தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக வரும் ஜூலை மாதம் 10 -ஆம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக யார் போட்டியிட போகிறார் என்பதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் […]

#Seeman 4 Min Read
Seeman

பணம் கொடுக்காமல் நேர்மையாக களத்தில் நிற்கும் கட்சி..நாதகவை பாராட்டிய அண்ணாமலை!

அண்ணாமலை : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றியும், நாம் தமிழர் கட்சியை பாராட்டியும் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணாமலை பேசியதாவது ” இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை நான் தோல்வியாக பார்க்கவில்லை. வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை […]

#Annamalai 3 Min Read
Default Image

மக்களவை தேர்தல் : அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி ..!

நாதக: மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக மக்களவை தகுதிகளான 39 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. மேலும், நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% சதேவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு கட்சிக்கு 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் தற்போது, 8.19% வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சியானது அங்கீகாரம் பெற்றுள்ளது. […]

#NTK 2 Min Read
Default Image

ஐ யம் வெயிட்டிங்.. விஜயுடன் கூட்டணியா.? சீமான் கலக்கல் பதில்.!

சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ‘i am waiting’  என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அடுத்ததாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் முழுவதுமாக ஈடுபடஉள்ளார். மேலும், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ள […]

#Seeman 4 Min Read
vijay and seeman

உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? – டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி

Seeman: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீமான் கூறியதாவது, சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? என கேள்வி உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார்.  […]

#BJP 5 Min Read
seeman

நாளை முதல் தேர்தல் பரப்புரை.. “மைக்” சின்னத்தில் போட்டி… சீமான் அறிவிப்பு!

Seeman: மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பைக் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு சின்னம் பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. அந்தவகையில், இத்தனை வருடங்களாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த […]

#NTK 6 Min Read
seeman

கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் […]

#NTK 5 Min Read
seeman

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்..!

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முயற்சித்ததாக என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு ஏஜென்சி) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன்  உள்ளிட்ட பலர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது  […]

#NIA 3 Min Read
Saattai Duraimurugan

NIA சோதனை – நாம் தமிழர் கட்சி ஐகோர்ட்டில் முறையீடு!

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவை, சென்னை, திருச்சி, சிவகங்கை மற்றும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில்,  திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன், வகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரதாப், தென்காசியில் […]

#NTK 5 Min Read
naam tamilar katchi

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவையில் 2 இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை மற்றும் தென்காசியில் தலா ஒரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில், திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, சிவகங்கையில் […]

#NTK 4 Min Read
NIA RAID