இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

வெக தொண்டர்களால் அக்.15 என வரையப்பட்ட சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

TVK Flag

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை தவெக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை.

ஆனால், அக்.15இல் மாநாடு நடைபெறும் என்று பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் முழுமை அடையாததால், செப்.23 நடபபதாக இருந்த மாநாடு அக்டோபருக்கு தள்ளிப் போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் தவெக தொண்டர்களால் அக்.15 என வரையப்பட்ட சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, அந்த சுவரில் செப்டம்பர் 23ம் தேதி என எழுதியிருந்ததை அக்.15 என மாற்றி விளம்பரம் செய்வதில் தவெகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால், மாநாட்டிற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக தவெக தலைவர் இன்னும் அறிவிக்கவில்லை. அது வரை நாம் காத்திருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்