‘வி’ சென்டிமென்ட்டை விடாத த.வெ.க விஜய்.! அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா.?

சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் 'வி' சென்டிமென்ட்டை  கடைபிடிக்கும் தவெக தலைவர் விஜய்.

vijay v sentiment

சென்னை : தவெக மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுக்கான பூமி பூஜை இன்று அதிகாலை 4.30 மணி அளவில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், நடத்தப்பட்டு மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது. விஜய் வருவார் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினார்கள்.

ஆனால், விஜய் நடைபெற்ற பூஜைக்கு வருகை தரவில்லை. அறிக்கை ஒன்றை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன் .. வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், ‘வி’ சென்டிமென்ட் இருப்பதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.  விஜய் எப்போதுமே ‘வி’ சென்டிமென்டை கடைபிடித்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது. அவருடைய, பெயர் விஜய் அதைப்போல அவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமான படம் வெற்றி.

அந்த படத்தில் அவருடைய பெயர் விஜய் தான். எனவே, சினிமாவில் அறிமுகம் ஆகும்போதே வி சென்டிமென்டில் தான் அறிமுகம் ஆகி இருக்கிறார்.  அதைப்போல, சினிமாவை தொடர்ந்து அரசியல் பயணத்தில் கால் வைத்த பிறகு தனது கட்சியின் பெயரிலும் V சென்டிமென்டை வைத்து இருக்கிறார். அதைப்போல, தன்னுடைய முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள வி.சாலையில் நடத்துகிறார். இதிலே 3 வி சென்டிமென்ட்கள் இருக்கிறது.

மேலும், மாநாடு குறித்து அவர் வெளியீட்டுள்ள அறிக்கையிலும், “வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்” எனகூறியுள்ளார். இதன் மூலம் விஜய் “வி” சென்டிமென்ட்காக தான் மாநாடு நடைபெறும் இடம் கூட இப்படி தேர்வு செய்து இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்