சென்னை : வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கம் ஒருவாரம் ஆகியும் இன்னும் பல்வேறு பகுதிகளில் தொடர்கிறது. இன்னும் வடதமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமலே இருக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழலும் நிலவி வருகிறது. மழைநீர் வடிந்த பிறகு நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு செயல்பட தொடங்கின. புதுச்சேரி மாநிலத்தில் நிவாரண […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களும் பள்ளி கல்லூரிகள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாத காரணத்தால் மாணவர்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 4) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து நேற்றைய தினமே அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, தென்பெண்ணை […]
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் கனமழையால் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் பொன்முடி நேரில் சந்திக்க சென்ற போது அவர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் ஏரி நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட சில கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருச்சி […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழையால் வடதமிழக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் மக்கள் பகுதிகளிக்குள் புகுந்துள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை பாதிப்பு குறித்தும், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, […]
விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்தது. விழுப்புரத்தில் சாத்தனூர் ஏரி முழு கொள்ளளவு எட்டிய நிலையில் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அதனால், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே, மழைநீரில் தங்கள் உடமைகளை […]
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் அதி கனமழை வரை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. கனமழை காரணமாக, ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்து விட்டது. […]
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27இல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதுவரை திரையில் கண்ட தங்கள் ஆஸ்தான ஹீரோவை கட்சித் தலைவராக காண மாநாட்டிற்கு ரசிகர்கள் தொண்டர்களாக வெள்ளம் போல திரண்டனர். சுமார் 13 லட்சம் பேர் தவெக முதல் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் விஜய் பேசிய திராவிடம், […]
விழுப்புரம் : த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் சரியாக 3 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மாநாடு தொடங்கியதை தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் தொண்டர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மேடைக்கு வருகை தந்தார். அப்போது, கட்சி பாடல் ஒலிக்கபட்டது. அதன்பிறகு, மாநாடு நடைபெறும் மேடைக்கு வருகை தந்தார். வந்தவுடன் தனது தொண்டர்களுக்கு கை அசைத்து நலம் விசாரித்தார். நடைபாதையில் கட்சித் தலைவர் விஜய் நடந்து கொண்டிருக்கும் போது மேடை பக்கவாட்டு தடுப்புகளை […]
விழுப்புரம் : தவெக மாநாடு தொடங்கிய நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டு மேடையில் தோன்றிய விஜய், அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை நோக்கி வணக்கம் செய்தார். இருபுறமும் அலைகடலென திரண்டிருந்த தொண்டர்கள் நடுவே அமைக்கப்பட்டு இருந்த ராம்ப்பில் நடந்து சென்ற தலைவர் விஜய்யை நோக்கி, தொண்டர்கள் கட்சித் துண்டுகளை வீச, சிலவற்றை அப்படியே கேட்ச் பிடித்த விஜய், தன் தோளில் அணிந்து கொண்டார். தற்பொழுது, மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து பின், 101 […]
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் தவெக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு வாகனங்களில் அணிவகுத்து வருகின்றனர். நேற்று இரவு முதலே மாநாடு நடைபெறும் இடத்தில் தவெக தொண்டர்கள் குவியதொடங்கி விட்டனர். இன்று மற்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விக்கிரவாண்டி சுற்றியுள்ள டோல்கேட் பகுதியில் நீண்ட […]
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று மாலை மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக நேற்று இரவு முதலே தவெக தொண்டர்கள் திரளானோர் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் குவிந்து வருகின்றனர். தற்போது பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இப்படியான சூழலில், சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரயிலில் பயணித்த தவெக தொண்டர் ரயிலில் விக்கிரவாண்டி அருகே ரயிலில் தவறி விழுந்து படுகாயமுற்று உயிரிழந்தார் என செய்திகள் வெளியாகின. ஏற்கனவே […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான கால் நட்டுதல் விழா இன்று அதிகாலை நடைபெற்று, மாநாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சி தலைவர் விஜய். அந்த அறிக்கையில், கட்சி ஏன் தொடங்கப்பட்டது.? தொண்டர்களுக்கான அறிவுரை, ஆகியவை குறிப்பிட்டு தனது அரசியல் பயணம் பற்றி விமர்சனம் […]
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டு பணிகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், தவெக தொண்டர்களுக்கு தோழர்களே எனக் குறிப்பிட்டு மாநாட்டிற்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு, வி.சாலை […]
சென்னை : தவெக மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுக்கான பூமி பூஜை இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், நடத்தப்பட்டு மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது. விஜய் வருவார் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினார்கள். ஆனால், விஜய் நடைபெற்ற பூஜைக்கு வருகை தரவில்லை. அறிக்கை ஒன்றை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு […]
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று அதிகாலை பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மாநாடு தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு அரசியல் கருத்துக்களையும், […]
சென்னை : த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். “வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்” என தனது முதல் கடிதம் மூலம் தொண்டர்களுக்கு முறையாக அழைப்பு விடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பூமி பூஜை செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பூமி பூஜை விமரிசையாக செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், மாநாட்டுக்கான பந்தக்கால் கோலாகலமாகஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூ நடப்பட்டது. அருணாச்சலேஸ்வரர் சுவாமி படம், தேவாலயம், மசூதி, கோயில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் என மும்மதங்கள் சாஸ்திரப்படியும், வேத மந்திரங்கள் முழங்க சூலத்துடன் தவெக மாநாடு பந்தல் கால் ஊன்றப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு […]
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக செப்டம்பர் மாதம் மாநாடு என செய்திகள் வெளியான நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தாமதமாவே, இறுதியாக அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் […]
துரை முருகன் : திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் துரை முருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பாக நின்ற அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பாமக சார்பில் நின்ற சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பிறகு 3-வது இடத்தில் நாதக […]
விக்கிரவாண்டி : நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருந்தது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை […]