நடிகையின் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார்! அண்ணாமலை கடும் விமர்சனம்!
திமுகவுடைய B டீம் தான் த.வெ.க தலைவர் விஜய் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து பேச தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் பெரிய அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார்.
அந்த அறிக்கையில், இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான. நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஆனால், விசாரணை நியாயமாக நடக்குமா என்பது. மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்” என அறிக்கையில் விஜய் கூறியிருந்தார்.
இதனையடுத்து, சென்னையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் அறிக்கை வெளியிட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை சற்று ஆவேசமடைந்து ” முதலில் த,வெ.கவை களத்திற்கு வந்து அரசியல் செய்ய சொல்லுங்கள். அதனைவிட்டுவிட்டு பள்ளிக்கூட பசங்க மாதிரி த.வெ.க அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். சினிமா படப்பிடிப்பு தளங்களில் இருந்தா அரசியல் செய்வார்கள்?
சினிமா ஷூட்டிங்கில் இருந்துகொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிகொண்டு விஜய் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார். எனக்கும் பதிலுக்கு பேச தெரியும்…த.வெ.க பவுண்டரியை தாண்டக்கூடாது தாண்டினால் நானும் பேச ஆரம்பிப்பேன். நானும் த,வெ.கவை இதுவரை மரியாதையாக தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் என்ன விஜய் மாதிரி நடிகைகள் இடுப்பை கிள்ளிகொண்டு அறிக்கைவிட்டு அரசியல் செய்கிறேனா? நான் களத்தில் நின்று கொண்டு போராடுகிறேன்…பேசிக்கொண்டு இருக்கிறேன்.
விஜய் செய்வது வீட்டில் இருந்தே அரசியல் செய்வது போல இருக்கிறது. விஜய்க்கு 50 வயதில் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று தோனியாதா? ஏன் 30 வயதில் அவர் அரசியலுக்கு வரவில்லை? விஜய் யாருடைய B டீம்? நாடகம் யாரு பண்றாங்க? பாஜக செய்கிறதா? விஜய் செய்கிறாரா? நாடகம் செய்வது பாஜக இல்லை த.வெ.க தான். திமுகவுடைய B டீம் தான் விஜய். உறுதியாக தமிழக வெற்றிகழகத்தின் நடவடிக்கைகளை பார்த்த பிறகு இதனை இப்போது சொல்கிறேன்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் த.வெ.க கட்சி கொண்டு வரப்பட்டிருக்கிறது. வரம்பு மீறி அவர்கள் பேசும்போது எனக்கும் பேச தெரியும். மரியாதை கொடுத்து மரியாதையை வாங்கிக்கொள்ள வேண்டும். சும்மா உட்கார்ந்து கொண்டு புஸ்ஸி ஆனந்த்…புஸ்ஸி ஆனந்த் என்று அறிக்கை விட கூடாது” எனவும் மிகவும் ஆவேசத்துடன் பேசிவிட்டு அண்ணாமலை சென்றார்.