சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ” வரும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று விடுதலை சிறுத்தைகள் மகளிர் அமைப்பு சார்பாக மதுஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.”என அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் கள்ளசாராயத்தால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,589ஆக உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினரை […]
டாஸ்மாக்: அரசு மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை சேகரிக்காமல் விட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலைப்பிரதேசங்களில் தூக்கி எறியப்படும் காலி மதுபாட்டில்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையில், ஒருநாளைக்கு 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் மூலம் விற்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. மேலும், செப்டம்பர் மாதம் முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் […]
சென்னை : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் […]
சென்னை: கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தனர். இன்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் கீழ் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா என கேட்டுக்கொண்டார். அதற்கு அத்துறை அமைச்சர் முத்துசாமி பதில் கூறுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த அரசுக்கு […]
சென்னை : தமிழ்நாட்டில் 2023 – 2024 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம், ரூ. 45,855.67 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்பிக்கப்பட்டது. அதில், 2023-2024 நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45,855,67 கோடி கிடைத்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டை விட, ரூ.1,734.54 கோடி கூடுதலாகும். 2022 – 2023 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Tasmac Close : தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு. 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நாளை மாறு நாள் ( ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அந்த நாள் அதாவது ஏப்ரல் 19-ஆம் தேதி அரசு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எப்போது விடுமுறை என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் […]
TASMAC : தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வழக்கமாக தேர்தல் நடைபெறும் நாளன்று மதுபான கடைகள் மூடப்படும். அதே […]
Tasmac: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையமானது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. Read More – மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்..! திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து அதில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்பதும் […]
தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. தமிழக அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி, டாஸ்மாக் மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா, பீர் உள்ளிட்ட மதுவகைகளின் விலை விரைவில் உயர உள்ளதாக கூறப்பட்டது. இதற்கேற்ப ஆப் பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்வதாக தகவல் […]
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரிம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..! மேலும், இந்த 4 மாவட்டங்களிலும், கல்வி நிறுவனங்கள், […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! கனமழை […]
சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிக்கும் வகையில், சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரதசகக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் ஆஜராகி விளக்கமளித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி […]
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை கலைக்கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. அந்த வகையில், நவம்பர் 11 ஆம் தேதி 220.85 கோடியும், நவம்பர் 12 ஆம் தேதி 246.78 கோடி விற்பனையாகியுள்ளது. நவ.11ம் தேதி மதுரையில் ரூ.52.73 கோடி, சென்னையில், ரூ.48.12 கோடி, கோவையில் […]
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபானங்களின் கொள்முதல், விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார். அதனை வழங்க டாஸ்மாக் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை […]
டாஸ்மாக் மூடிய பிறகு பொது இடங்களில் மது அருந்துவோர் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. டாஸ்மாக் மதுபான கடை மூடிய பிறகும் பலர் பொது இடங்களில் மது அருந்தி வருகின்றனர். இதனால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில்,டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட பின்னரும் பொதுவெளியில் மது அருந்துவோரை […]
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதற்காக கடை பொருப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக 4.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. – டாஸ்மாக் நிர்வாகம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் நீண்ட காலமாக எழுந்துள்ளன. தற்போது இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்றதற்காக இதுவரையில் 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
டாஸ்மார்க் பணியாளர்கள் டாஸ்மார்க் நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக அறிக்கை. பெரும்பாலான கடைகளில் ஊழியர்கள் பணியில் இல்லாமல் வெளி நபர்களை பணியில் அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் பணியாளர்கள் டாஸ்மார்க் நிறுவனத்தில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், கடைப் பணியாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரியும் பொழுது சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளரின் அனுமதி பெற்று […]
குறைவான நேரம் டாஸ்மாக் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது, மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என்றும் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல […]
மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டமில்லை – உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திட்டவட்டம். மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்குக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்கும் முடிவு இல்லை என டாஸ்மாக் உறுதியளித்தது. இதனை அடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது.