கழகப் போராளி திடீர் மரணம்., தவெக தலைவர் விஜய் வேதனை.!

தவெக புதுச்சேரி நிர்வாகி சரவணன் உயிரிழந்ததற்கு அக்கட்சி தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

TVK Leader Vijay - TVK Person Saravanan

சென்னை :தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர்  27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. தவெக புதுச்சேரி கட்சி நிர்வாகி சரவணன் இந்த மாநாட்டுக்கான பணிகளை நேற்று பார்வையிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாநாடு பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்த சரவணன் மறைவு செய்தி கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மறைவுக்கு தவெக கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து தற்போது தவெக கட்சித் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், ” தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர். கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி  சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

unknown node