தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்…’ராயன்’ குறித்து சித்தப்பு பேச்சு!

saravanan about raayan dhanus

Raayan நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தனுஷின் 50-வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி, சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். read more- 43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்! இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் … Read more

நெல்லை மேயர் விவகாரம் – நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

Nellai Mayor

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என அம்மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில், அங்கு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று, நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இதையடுத்து, திமுக சார்பில் மேயராக பி.எம். சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவியது. … Read more

மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்.! லெஜண்ட் சரவணன் அதிரடி.! 

மக்களும், மகேசனும் மனசு வைத்தால் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் கூறினார்.  திரைத்துறையில் அதிரடியாய் பிரமாண்டமாய் அறிமுகமாகி,  முதல் படத்திலேயே நல்ல வசூலை பெற்ற  ஹீரோ தான் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி. இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட் என்றாலும், அந்த தொகையை படம் வசூல் செய்யவில்லை. ஆனால், ஒரு அறிமுக ஹீரோ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து நல்ல வசூல் கிடைத்தது. அதே போல, அடுத்த படமும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. … Read more

நிதியமைச்சர் எங்கு சென்றாலும் எதிர்ப்போம் – பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர்!

அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்டார் என பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பேட்டி. மதுரை விமான நிலையத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர். இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது … Read more

தமிழ்நாடு காவல்துறையில் முதல் முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்.பி.க்கள் நியமனம்!

உளவுத்துறை எஸ்.பி.யாக ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக சரவணன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாடு காவல்துறை முதல் முறையாக உளவுத்துறைக்கு இரண்டு எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை எஸ்.பி.யாக ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக சரவணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்பி பணியிடத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு … Read more

பிக்பாஸ் பிரபலங்களுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.!

பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், சேரன்,சிநேகன் ஆகியோருடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக்.தற்போது பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் இவர் புது படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் .நடிகரும் இயக்குனருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் சாண்டி.! முக்கிய வேடத்தில் ரேஷ்மா, சரவணன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாண்டி சந்துரு இயக்கத்தில் உருவாகும் படத்தில் சாண்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார் . திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிக்பாஸில் சாண்டியுடன் போட்டியிட்ட ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.மேலும் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான ஸ்ருதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை … Read more

உயிரோடு இருந்த அண்ணனின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த தம்பி!

உயிரோடு இருந்த அண்ணனின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த தம்பி. சேலம் மாநகராட்சி கந்தம்பட்டி அருகே வசித்து வருபவர் சரவணன்(70). இவர் அவரது அண்ணனான பாலசுப்பரமணிய குமார் என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி, இறந்தவர்களின் உடலை வைக்கும் குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்காக, உடலை வைத்திடும் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, பாலசுப்பிராமணிய குமாரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த பின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, குளிர்சாதன பெட்டி உரிமையாளர்கள், பெட்டியை எடுக்க வந்துள்ளனர். அங்கு … Read more

மயங்கி விழுந்த தொழிலாளியை மீட்ட காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

காவலர் சரவணன் பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.  இன்று மக்களை காக்கும் பணியில், காவல்துறையினர் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், சில காவலர்கள், மக்களிடம் கோபமாகவோ, அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவத்துடனோ நடந்து கொள்வதுண்டு. அவர்களையும் தானடி மானிதாபிமானதுடன் பனி செய்யம் காவலர்களும் உள்ளார்கள் என்பதற்கு இவர்களை போன்ற காவலர்களே எடுத்துக்காட்டாக உள்ளனர்.  மணப்பாறையில், போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தனது … Read more

நான் சிங்கிள் தான், ஆனால் காதலர் தின வாழ்த்துக்கள்டா நல்லாருங்க போங்க!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் சரவணன். இவரது நகைச்சுவை பேச்சால் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்னிடம் கொண்டுள்ளார். இந்நிலையில், தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடும் இவர் தற்போது தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நான் சிங்கிள் தான், ஆனா. உங்க  எல்லாருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள். போங்கடா நல்லா … Read more