தமிழ்நாடு காவல்துறையில் முதல் முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்.பி.க்கள் நியமனம்!
உளவுத்துறை எஸ்.பி.யாக ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக சரவணன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.
தமிழ்நாடு காவல்துறை முதல் முறையாக உளவுத்துறைக்கு இரண்டு எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை எஸ்.பி.யாக ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக சரவணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்பி பணியிடத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். அதுவும், கடந்த 4 மாதத்தில் மட்டும் டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் என பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளது.