தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன்...'ராயன்' குறித்து சித்தப்பு பேச்சு!

இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இன்னுமே சில

saravanan about raayan dhanus

Raayanநடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தனுஷின் 50-வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி, சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

read more- 43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்!

இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இன்னுமே சில பிரபலங்கள் இருப்பதாகவே கூறப்பட்டு வருகிறது. தினம் தினம் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி கொண்டு இருக்கிறது.

unknown node

Saravanan [File Image]அந்த வகையில், கடைசியாக படத்தில் பருத்திவீரன் படத்தில் சித்தப்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானசரவணன்நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நீ கலக்கு சித்தப்பு என வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, பேட்டி ஒன்றில் ராயன் குறித்து சரவணன் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

read more- நீருக்கடியில் முத்தக்காட்சி…15 நாள் வேதனை- தன்வி நேகி!

அந்த பேட்டியில் சரவணன் பேசியதாவது ” தனுஷ் இயக்கம் படத்தில் நான் நடிக்கிறேன். இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒரு திரைப்படம் என்று சொல்வேன். முதலில் கதையை கேட்டுவிட்டு தனுஷ் நடிகர் தான என்னத்தை இயக்கப்போறாருனு நினைச்சேன் ஆனால், படப்பிடிப்புக்கு சென்று பார்த்தவுடன் மிரண்டு விட்டேன்.

read more-அஜித்துடன் அதை மறக்கவே முடியாது…புகழ்ந்த சிம்ரன்! சிக்னல் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

அந்த அளவிற்கு அந்த படத்திற்குள் இறங்கி தனுஷ் திவீரமாக வேலை செய்து இருக்கிறார். அவருடைய வேலையை பார்த்து நான் மிரண்டு விட்டேன். கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்படும்” என சரவணன் தெரிவித்துள்ளார்.  இவர் பேசியதன் மூலம் ராயன் படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.