திமுக – விசிக கூட்டணி பேச்சு வார்த்தை: விசிகவிற்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு!!

Default Image
  • இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் துவங்க இருக்கிறது
  • இதனால் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான, கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க உள்ளது. எப்போதும் போல் தமிழகத்தில் இருமுனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மறுபக்கம் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு போட்டி போட தயாராகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக புதிய தமிழகம் என இரண்டு கட்சிகள் சேர்ந்துள்ளன.

திமுக கூட்டணியில் ஏற்கனவே சொன்னதுபோல் தோழமை கட்சிகள் அனைத்தும் கூட்டணியை வைக்கும் இடத்தில் தான் உள்ளது ஏற்கனவே. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதர்வு அளித்தது . இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பல வாரங்களாக நீடித்து வந்த இழுபறி தற்போது பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து இரண்டு தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்